பிண்டி மசாலா செய்ய தேவையான பொருட்கள்:
வெண்டைக்காய் – அரை கிலோ
தக்காளி – 100 கிராம்
வெங்காயம் – 100 கிராம்
பச்சை மிளகாய் – ஒன்று
மிளகாய் பேஸ்ட் – ஒரு டீஸ்பூன்
பூண்டு – 1
கருவேப்பிலை – ஒரு கொத்து
உப்பு – தேவைக்கேற்ப
எண்ணெய் – ஒரு டேபிள் ஸ்பூன்
தனியா பொடி – 3 டீஸ்பூன்
மிளகாய் பொடி – ஒரு ஸ்பூன்
மஞ்சள் பொடி – அரை ஸ்பூன்
மல்லி இலை – அலங்கரிக்க
செய்முறை:
வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் பூண்டு மற்றும் கறிவேப்பிலை போட்டு தாளித்து, அதனுடன் பொடியாக நறுக்கிய வெங்காயத்தையும் சேர்த்து பொன்னிறமானதும் பச்சை மிளகாய் போட்டு நன்கு கிளற வேண்டும்.
வதங்கியதும் அதனுடன் தக்காளி, நறுக்கிய வெண்டைக்காயை சேர்த்து கிளறி விடவும். பின்பு தனியப்பொடி, மிளகுப்பொடி, மிளகாய்ப்பொடி சேர்த்து நீரில் கட்டிகளில்லாமல் கரைத்து வதக்கவும்.
மேலும் சிறிது நேரம் கொதிக்க விட்டு, அலங்கரிக்க மல்லி இலை தூவி பரிமாறவும். இப்போது சுவையான பிண்டி மசாலா தயார்.