சீனாவில் புதிய ஹோண்டா CG125 பைக்கை ஹோண்டா நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இந்த பைக் இந்தியாவில் 90-களில் விற்பனை செய்யப்பட்ட ஹோண்டா CT 100 டிசைனை கொண்டுள்ளது. மேலும் இந்த பைக் ரெட்ரோ டிசனையில் வெளியாகியுள்ளது. கிளாசிக் மாடலின் அடிப்படையில் இண்டிகேட்டர்கள், டெயில் லேம்ப், ஸ்கொயர் ஹெட்லேம்ப் ஆகியவை தரப்பட்டுள்ளன. இந்த பைக் 90-களில் உள்ளது போல டிஜிட்டல் இல்லாமல் முழுவதும் அனலாக் இன்ஸ்ட்ருமெட் கிளஸ்டரையே கொண்டுள்ளது.
இந்த பைக் ஏர் கூல்டு, 125சிசி இன்ஜினை கொண்டுள்ளது. இது 9.5Nm பீக் டார்க் மற்றும் 9.9bhp அதிகபட்ச பவரை உருவாக்கக்கூடியது. லிட்டருக்கு சுமார் 55.5 கிலோமீட்டர் ஃபூயல் எகானமியை இந்த பைக்கின் இன்ஜின் கொண்டுள்ளது. இந்திய மதிப்பில் இந்த பைக்கின் விலை ரூ.90,000-ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சீனாவில் மட்டும் அறிமுகமாகியுள்ள இந்த பைக் உலகம் முழுவதும் விரைவில் அறிமுகமாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.