Categories
டெக்னாலஜி

ஹோண்டா பைக்…. 1 ரூபாய் கூட கொடுக்காமல் வீட்டுக்கு எடுத்துட்டு போங்க…. வெளியான சூப்பர் சலுகை….!!!!

ஹோண்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் (HMSI) இந்தியாவின் 2வது பெரிய இருசக்கர வாகன நிறுவனம் ஆகும். இது ஹீரோவுக்கு அடுத்த படியாக 2வது பெரிய விற்பனை ஆகும். இந்நிறுவனம் தீபாவளியை முன்னிட்டு சிறப்பான சலுகைகளை அறிவித்து இருக்கிறது. இந்த சலுகையில் வாடிக்கையாளர்கள் ஜீரோ டவுன் பேமென்ட் மற்றும் நோகாஸ்ட் இஎம்ஐயில் ஸ்கூட்டர்கள், மோட்டார்சைக்கிள்களை வாங்கலாம். இதன் வாயிலாக வாடிக்கையாளர்கள் பைக் (அல்லது) ஸ்கூட்டரை பணம் செலுத்தாமல் வீட்டுக்கு எடுத்துச்செல்லலாம்.

அக்டோபர் 31ம் தேதி வரை இச்சலுகை பொருந்தும். ஹோண்டா நிறுவனத்தின் அனைத்து மாடல்களுக்கும் இச்சலுகையானது பொருந்தும். ரூபாய்.50,000 வரையிலான பரிவர்த்தனைகளுக்கு ரூ.5000 வரை கேஷ்பேக் சலுகை இருக்கிறது. IDFC பேங்க் கிரெடிட்கார்டிலிருந்து EMI செய்து வாடிக்கையாளர்கள் இதனைப் பயன்படுத்திக் கொள்ளலாம். இது தவிர்த்து இந்த கேஷ்பேக் சலுகை ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட் வங்கி, பெடரல் வங்கி மற்றும் பாங்க்ஆஃப் பரோடா வாடிக்கையாளர்களுக்கும் கிடைக்கும்.

எனினும் ஜீரோ டவுன் பேமென்ட் மற்றும் நோ காஸ்ட் இஎம்ஐ சலுகையை பொறுத்தவரையிலும் வாகனத்தை யார் பெறுகிறார்கள், யார் பெற மாட்டார்கள் என்பது நிறுவனத்தின் வழிமுறைகளுக்குட்பட்டது. குறிப்பிடத்தக்க அடிப்படையில் ஹோண்டா இருசக்கர வாகனங்கள் இந்திய சந்தையில் உறுதியாக இருக்கிறது. செப்டம்பர் 2022ல், மொத்தம் 5.18 லட்சம் இரு சக்கர வாகனங்களை விற்பனை செய்து இருக்கிறது. செப்டம்பர் 2021ல் இந்த எண்ணிக்கையானது 4.88 லட்சமாக இருந்தது. ஆண்டு விற்பனையில் மொத்த வாகனவிற்பனை 7.6 சதவீதம் அதிகரித்துள்ளது. பண்டிகைக்காலத்தில் விற்பனையை மேலும் அதிகபடுத்தும் விதமாக நிறுவனம் சலுகைகளை வழங்கி இருக்கிறது.

Categories

Tech |