Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

ஹோலி கொண்டாட்டம்… “உங்களுக்கு அந்த கவலையே இல்லையா…?” கடுப்பான நெட்டிசன்ஸ்…!!!

ஹோலி பண்டிகையை முன்னிட்டு ஐஸ்வர்யா வெளியிட்ட புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்ஸ் விமர்சித்து வருகின்றனர்.

தனுஷை பிரிந்த ஐஸ்வர்யா தனது கெரியரில் கவனம் செலுத்தி வருகின்றார். இந்நிலையில் இவர் இயக்கிய “பயணி” பாடல் அண்மையில் வெளியானது. இது எதிர்பார்த்த அளவு இல்லை என விமர்சனங்கள் எழுந்திருக்கின்றது. இந்நிலையில் ஹோலி பண்டிகையை முன்னிட்டு ஐஸ்வர்யா கலர்களை பூசிய கொண்டாடிய புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது, “சில வண்ணங்கள் இல்லாத வாழ்க்கை என்ன?.. ஹோலி எங்கள் குடும்பத்திற்கு கூடுதல் சிறப்பு.. ஏனெனில் சிவாஜிக்கு ரஜினிகாந்த் என்று இந்த நாளில் எங்கள் அன்பான கே.பாலச்சந்தர் தாத்தா பெயரிட்டார், அது அங்கு தான் தொடங்கியது.. நாளை கலரை கழுவி விடுங்கள்… ஆனால் புன்னகையுடன் இருங்கள்” என்று பதிவிட்டிருந்தார்.

இந்நிலையில் பதிவிட்ட புகைப்படத்தை பார்த்த இணையதள வாசிகள் உங்களுக்கு குழந்தைகள், குடும்பம் பற்றி எந்த கவலையும் இல்லை? , உங்கள் சந்தோஷம் தான் உங்களுக்கு முக்கியமா? என கேள்வி கேட்டு வருகின்றனர்.

Categories

Tech |