ஹோலி பண்டிகையை முன்னிட்டு பயணியர் வசதிக்காக ஒரு வழி யஷ்வந்த்பூர் – கோரக்பூர் விரைவு சிறப்பு ரயில் இயக்கப்படும் என்று தென்மேற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், பண்டிகையை முன்னிட்டு பயணியர் வசதிக்காக ஒரு வழி யஷ்வந்த்பூர் -கோரக்பூர் விரைவு சிறப்பு ரயில் இயக்கப்படும் என்று ரயில்வே நிலையம் அறிவித்துள்ளது. எண்: 06597 யஷ்வந்த்பூர் -கோரக்பூர் விரைவு சிறப்பு ரயில், மார்ச் 12 ஆம் தேதி யஷ்வந்த்பூரில் மாலை 5:20 மணிக்கு புறப்பட்டு, ஹிந்துபுர், தர்மாவரம், அனந்தபூர், குண்டகல், அதோனி.மந்த்ராலயம் சாலை, ராய்ச்சூர், பேகம்பேட், செகண்தராபாத், காசிபெட், ராமகுண்டம், மன்சிர்யால், பெல்லம்பள்ளி, பால்ஹர்ஷா.சந்திராபுர், நாக்பூர், அம்லா, பேடுல், கோரடொங்க்ரி, இடர்சி, ஜபல்பூர், கட்னி, சட்னா, பன்டா, கான்பூர் சென்ட்ரல், உன்னாவ், ஆஷ்பாக், பாத்ஷா நகர், பாரபங்கி, கோன்டா, மங்காபூர், பாஸ்டி, காலிலாபாத் வழியாக கோரக்பூருக்கு 3-ம் நாள் இரவு 7:30 மணிக்கு சென்றடையும் என்று அதில் குறிப்பிட்டுள்ளது.