Categories
தேசிய செய்திகள்

ஹோலி பண்டிகை: மார்ச் 17 முதல் 20 வரை…. 4 நாட்கள் விடுமுறை…. வெளியான அறிவிப்பு…!!

மாநிலங்களவை மற்றும் மக்களவை ஆகிய இரு அவைகளுக்கும் மார்ச் 17 முதல் 20 வரை தொடர்ந்து நான்கு நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-வது பகுதி நேற்று தொடங்கியது.  நேற்று காலை 11 மணிக்கு மாநிலங்களவை மற்றும் மக்களவை ஆகிய இரு அவைகளும் தொடங்கப்பட்டு நடைபெற்று உள்ளன. மாநிலங்களவை கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன், மாநிலங்களவை உறுப்பினர்களான நபின் சந்திரா பராகொஹைன், ராகுல் பஜாஜ், பேராசிரியர் டிபி சட்டோபாத்யாயா மற்றும் யட்லாபடி வெங்கட் ராவ் ஆகியோரது மறைவிற்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

இதனைத் தொடர்ந்து கூட்டத் தொடருக்கான விவாதம் தொடர்ந்து நடைபெற்று வந்தது. அப்போது  மாநிலங்களவை சபாநாயகர் வெங்கையா நாயுடு பேசியதாவது, வருகிற மார்ச் 17 மற்றும் 18 ஆகிய இரு நாட்கள் ஹோலி பண்டிகையையொட்டி, மாநிலங்களவை  கூட்டத் தொடருக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக தெரிவித்துள்ளார். மேலும் அதே போல் மேற்கண்ட நாட்களில் மக்களவை கூட்டத்  தொடருக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.

இதையடுத்து வார இறுதி நாட்களாக மார்ச் 19 மற்றும் 20 ஆகிய தேதிகள் வருவதால் மார்ச் 17-ஆம் தேதி தொடங்கி மார்ச் 20ஆம் தேதி வரை நாடாளுமன்ற இரு அவைகளும் தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை ஆகும் என தெரிவித்துள்ளார்.

Categories

Tech |