தமிழகத்தில் கடந்த நிதி ஆண்டில் 3.26 லட்சம் வணிகர்கள் ஒரு ரூபாய்கூட வரி செலுத்தவில்லை என தமிழக அரசு அதிர்ச்சி தரும் அறிக்கையை வெளியிட்டுள்ளது. கடந்த 2021-22 நிதியாண்டில் வணிகத்துறையில் சுமார் 3.26 லட்சம் வாடிக்கையாளர்கள் ஒரு ரூபாய்கூட வரி செலுத்தவில்லை. அதேபோல் சுமார் 1.92 லட்சம் வணிகர்கள், ரூபாய் 1000-க்கும் கீழ் சரக்கு மற்றும் சேவை வரியை கடந்த நிதி ஆண்டில் செலுத்தியுள்ளனர். வணிகர்களுக்கு மின்னஞ்சல் மூலமாக தகவல் அனுப்பப்பட்டு அவர்களுடைய கணக்கை சரி பார்த்து உரிய வரி செலுத்துமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் வணிகர்கள் வரி ஏய்ப்பு செய்வது கண்டறியப்பட்டால் வரியுடன் வட்டி மற்றும் தண்டனை தொகை சேர்த்து விதிக்கப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. எனவே அனைத்து வணிகர்களும் இன்னும் ஒரு மாதத்திற்குள் தங்களது கணக்கை சரிபார்த்துக் வரியை செலுத்தும் படி தமிழக அரசு எச்சரித்துள்ளது.