Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

யாருக்கு அதிர்ஷ்ட வாய்ப்பு…. எந்தராசிக்காரருக்கு பணவரவு.. முழு ராசிபலன் அறிய..!!

நாளுக்குள் கடவுள் நம்பிக்கையுடன் இணைந்து ராசி பலன்களும் மக்கள் என்ன ஓட்டத்தில் பிரதி பலிக்கின்றது . நம்முடைய வீட்டிலும் , குடும்பத்தில் எந்த செயலை தொடங்கினாலும் நல்ல நேரம்,  ராசி என்னவெண்று தெரிந்து கொள்ள தினம் தினம் நாள்கட்டியில் கண்டு கழிக்கும் பழக்கம் பலருக்கும் இருந்து வருகின்றது. இந்த நிலையில் மேஷ ராசி முதல் மீனம் ராசி வரை உள்ள 12 ராசிகளின் ராசிபலனை தெரிந்து கொள்ளலாம்.

மேஷம் : 

மேஷம் ராசி அன்பர்களே..!! இன்று தனலாபம் உங்களுக்கு அதிகரிக்கும் நாளாக இருக்கும். உதவி என்று வந்தவர்களுக்கு உதவிக்கரம் நீட்டுவீர்கள். பிரிந்த தம்பதியர் இணைந்து மகிழ்வார்கள். எல்லா வகையிலுமே உங்களுக்கு மகிழ்ச்சி மிக்க நாளாக இருக்கும். இன்று மன அமைதி பாதிக்கும் படியான சூழ்நிலை இருக்கும். திடீர் செலவு கொஞ்சம் உண்டாகும் பார்த்துக்கொள்ளுங்கள். இன்று விருந்து நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளக் கூடிய வாய்ப்புகளும் அமையும். இன்று மாணவர்கள் பாடங்களில் மிகவும் கவனமாக படிப்பது கூடுதல் மதிப்பெண் பெறுவதற்கு உதவும். சக மாணவருடன் அனுசரித்துச் செல்லுங்கள்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். சக ஊழியர்களுடன் கடுமையாக பேசாமல் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுதோ முக்கியமான காரியத்திற்கு செல்லும் போதோ நீல நிறத்தில் ஆடை அல்லது நீல நிறத்தில் கைக்குட்டையை எடுத்து செல்லுங்கள். அனைத்துக் காரியமும் சிறப்பாகவே இருக்கும். அதுபோலவே இன்று நீங்கள் காக்கைக்கு அன்னமிட்டு இன்றைய நாளை தொடங்கினால் அனைத்தும் சிறப்பாகவே இருக்கும்.

இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் :  5 மற்றும் 6

அதிர்ஷ்ட நிறம் : நீலம் மற்றும் இளம் பச்சை நிறம்

ரிஷபம் : 

ரிஷபம் ராசி அன்பர்களே..!! இன்று நிதி நிலை உயரும் நாளாக இருக்கும். புதிய வேலைக்கான வாய்ப்பு உருவாகும். அரசு வேலைக்கான அழைப்பு கூட வரலாம். இன்று மனைவி மூலம் உங்களுக்கு அதிர்ஷ்டமான வாய்ப்புகளும் மகிழ்ச்சியான சம்பவங்களும் நடக்கும். இன்று சுகபோக வாழ்கை அமையும். தன லாபம் சிறப்பாக இருக்கும். உங்களுடன் கருத்து வேற்றுமை ஏற்பட்டவர்கள் பிரிந்து சென்றவர்கள் மீண்டும் உங்களை தேடி வரக்கூடும். தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்களில் நல்ல பலன்கள் கிடைக்கும். எதிர்பார்த்த லாபம் வரும். கணவன் மனைவிக்குள் அன்பு இருக்கும். அக்கம்பக்கத்தினரிடம் மட்டும் கொஞ்சம் அனுசரித்து செல்லுங்கள். அது போதும்.

வீண் வாக்குவாதங்கள் யாரிடமும் செய்ய வேண்டாம். இன்று மாணவர்கள் கல்வியில் நல்ல வெற்றி வாய்ப்புகளை குவிக்க முடியும். ஆசிரியர்களின் சொல்படி மட்டும் நடந்து கொள்ளுங்கள். இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும்போது முக்கியமான காரியத்திற்கு செல்லும் பொழுது வெள்ளை நிற ஆடை அல்லது வெள்ளை நிறத்தில் கைக்குட்டையை  எடுத்துச் செல்லுங்கள். அனைத்துக் காரியமும் சிறப்பாகவே இருக்கும். அதுபோலவே காலையில் எழுந்ததும் காக்கைக்கு அன்னமிட்டு இன்றைய நாளை தொடங்கினால் அனைத்துக் காரியமும் சிறப்பாக இருக்கும். வெற்றி பெறக் கூடிய சூழலும் இருக்கும்.

இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை :  மேற்கு

அதிர்ஷ்ட எண் :  5 மற்றும் 7

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை மற்றும் நீல நிறம்

மிதுனம் : 

மிதுனம் ராசி அன்பர்களே..!! இன்று புதிய வேலைக்கான வாய்ப்பு உங்களுக்கு உருவாகும். விருப்பத்திற்கு மாறாகவே எண்ணிய காரியங்கள் கொஞ்சம் நடக்கும். பொறுமையை மட்டும் இழந்து விடாதீர்கள். வழக்குகளை ஒத்திப் போடுவது நல்லது. வாகன சுகம் குறையும். இன்று உயர் அதிகாரியிடம் பேசும்பொழுது பணிவுடன் நடந்து கொள்ளுங்கள். கணவன் மனைவிக்கு இடையே சுமூக உறவு இருக்கும். பிள்ளைகளுக்கு தேவையான ஆடை அணிகலன்கள் வாங்கிக் கொடுப்பீர்கள். கருத்து வேற்றுமையால் பிரிந்து சென்றவர்கள் மனம் மாறி மீண்டும் திரும்பி வருவார்கள். பணவரவு ஓரளவு திருப்தியை கொடுக்கும். காரியத்தில் அனுகூலமும் இருக்கும். தொழில் வியாபாரம் தொடர்பான அலைச்சல்கள் அதிகரிக்கும். வெளியூர் பயணத்தில் கவனம் இருக்கட்டும். வாடிக்கையாளரிடம் பேசும்போது நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது.

இன்று மாணவர்கள் கல்வியில் நல்ல முன்னேற்றத்தை அடைய கடுமையாக தான் உழைக்க வேண்டியிருக்கும் பார்த்துக்கொள்ளுங்கள். ஆசிரியரிடம் ஏதேனும் சந்தேகம் இருப்பின் தைரியமாக கேட்டு தெரிந்து கொள்ளுங்கள். இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும்போதோ முக்கியமான காரியத்திற்கு செல்லும்போதோ கரு நீல நிறத்தில்  ஆடை அல்லது கரு நீலத்தில் கைக்குட்டையை எடுத்து செல்லுங்கள். அனைத்துக் காரியமும் சிறப்பாக இருக்கும். அதுபோலவே காலையில் எழுந்ததும் காக்கைக்கு அன்னமிட்டு இன்றைய நாளை தொடங்குங்கள். அனைத்து விஷயங்களும் சிறப்பாக இருக்கும். உங்களுடைய கர்ம தோஷங்களும் படிப்படியாக குறையும்.

இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 4 மற்றும் 6

அதிர்ஷ்ட நிறம் : கரு நீலம் மற்றும் மஞ்சள் நிறம்

கடகம் : 

கடகம் ராசி அன்பர்களே..!! இன்று வெற்றி வாய்ப்புக்கள் குவிவதால் மனம் தெம்பும் மகிழ்ச்சியும் பெருகும். குழந்தைகள் மீது அளவற்ற பாசம் காட்டுவீர்கள். மனைவியின் உதவிகளால் தன்னம்பிக்கை கூடும். இன்று மாணவர்களுக்கு கல்வி தொடர்பான செலவுகள் அதிகரிக்கும். கல்வியில் முன்னேற கடுமையாகவும் உழைப்பீர்கள். குறிக்கோளுடன் செயல்படுவீர்கள். இன்று எதிர்ப்புகள் விலகி செல்லும். ஆடை ஆபரணம் அலங்காரத்தையும் இன்று விரும்புவீர்கள். புத்தாடை வாங்கி மகிழ்வீர்கள். வீண் மனக்குழப்பங்கள் ஏற்பட்டாலும் முடிவில் தெளிவு பிறக்கும். தேவையற்ற பிரச்சனைகளில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது. வீண் வாக்குவாதங்கள் நடக்கும் இடங்களில் நிற்பதும் நல்லது இல்லை. அது போலவே யாருக்கும் பஞ்சாயத்துகள் ஏதும்  செய்யாதீர்கள். அது போதும்.

இன்றைய நாள் நீங்கள் நினைத்தது நடக்கும் நாளாகவே இருக்கும். குடும்பத்தில் ஓரளவு மகிழ்ச்சி இருக்கும். கலகலப்பும் இருக்கும். வெளியூர் பயணத்தின் போது கொஞ்சம் கவனமாக செல்லுங்கள். பொருட்கள் மீது கவனம் இருக்கட்டும். இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும் போதோ முக்கியமான காரியத்திற்கு செல்லும் பொழுதோ வெள்ளை நிற ஆடை அல்லது வெள்ளை நிறத்தில் கைக்குட்டையை எடுத்துச் செல்லுங்கள். அனைத்துக் காரியமும் சிறப்பாக இருக்கும். அதுபோலவே காக்கைக்கு அன்னமிட்டு இன்றைய நாளை தொடங்குங்கள். அனைத்து விஷயங்களும் நல்லபடியாக நடக்கும். உங்களுடைய கர்ம தோஷங்களும் படிப்படியாக குறையும்.

இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை :  கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 1 மற்றும் 7

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் மற்றும் வெள்ளை நிறம்

சிம்மம் : 

சிம்மம் ராசி அன்பர்களே..!! இன்று வியாபாரத்தில் தன லாபம் அதிகரித்து உங்களுடைய செல்வ நிலை இன்று உயரும் நாளாக இருக்கும். எல்லா வகையிலுமே இன்று நீங்கள் நன்மைகளை ஏற்படுத்திக் கொள்வீர்கள். கல்வியில் வெற்றி உண்டாகும். பிரிந்தவர்கள் கூடி பேரின்பம் காண்பார்கள். இன்று காரிய அனுகூலம் ஏற்படும். முக்கிய நபர்களின் உதவிகள் கிடைக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். துணிச்சலுடன் செயல்பட்டு எடுத்த காரியத்தை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். சொன்ன சொல்லை காப்பாற்ற கடுமையாக உழைப்பீர்கள். தேவையான உதவிகள் கிடைக்கப்பெற்று மனமும் சந்தோஷமாக இருக்கும். உடன்பிறந்தோருடன் உங்களுக்கு உறவுநிலை பலப்படும்.

இன்று மாணவர்கள் கல்வியில் நல்ல முன்னேற்றத்தை பெறக்கூடும். வெற்றி வாய்ப்புகளை குவிக்க முடியும். கல்வியில் இன்று நீங்கள் மிகப்பெரிய அளவில் வெற்றியை ஏற்படுத்திக்கொள்ள முடியும். அது போலவே இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும் போதோ முக்கியமான காரியத்திற்கு செல்லும் பொழுதோ வெள்ளை நிற ஆடை அல்லது வெள்ளை நிறத்தில் கைக்குட்டையை எடுத்து செல்லுங்கள். அனைத்துக் காரியமும் சிறப்பாகவே இருக்கும். அது போலவே தான் நீங்கள் காலையில் எழுந்ததும் காக்கைக்கு அன்னமிட்டு இன்றைய நாளை தொடங்குங்கள். அனைத்துக் காரியமும் சிறப்பாகவே இருக்கும். கர்ம தோஷங்கள் நீங்கி மனமும் மகிழ்ச்சியாகவே இருக்கும்.

இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 3 மற்றும் 7

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை மற்றும் நீல நிறம்

கன்னி : 

கன்னி ராசி அன்பர்களே.!! இன்று உறவினர் வருகையால் மனம் மகிழும். பல வழிகளிலும் பணம் வந்து சேரும். அரசாங்கத்தால் லாபமும் உண்டாகும். அந்தஸ்து உயரும். பேச்சால் காரியத்தை சாதித்துக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் அலுவலக பணிகளை சிரமமின்றி செய்து முடிப்பீர்கள். பயணங்கள் செல்ல வேண்டியிருக்கும். குடும்பத்தில் சகஜ நிலை திரும்பும். மற்றவர்கள் செயல்களால் திடீர் கோபம் மட்டும் ஏற்படும் பார்த்துக்கொள்ளுங்கள். பொறுமையாக இருங்கள். எதிர்பார்த்த உதவிகளும் கிடைக்கும். வீண் செலவை குறைத்துக் கொண்டால் அனைத்து விஷயங்களிளுமே இன்று வெற்றி வாய்ப்புகள் இருக்கும். பிடிவாதத்தை விடுவது நன்மையை கொடுக்கும். அறிவுத்திறன் கூடும். பணவரவு நல்லபடியாகவே கிடைக்கும்.

தடைபட்ட காரியங்கள் சாதகமாக நடந்து முடியும். பிரச்சனைகளில் இருந்து விடுபட கூடிய நாளாகவும் இன்று இருக்கும். இன்று மாணவர்கள் கல்வியில் நல்ல முன்னேற்றத்தை பெறக்கூடும். ஆசிரியர்களிடம் அன்பும் பாராட்டும் கிடைக்கக்கூடும். இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும் போதோ, முக்கியமான காரியத்திற்கு செல்லும் போதோ மஞ்சள் நிற ஆடை அல்லது மஞ்சள் நிறத்தில் கைக்குட்டையை எடுத்துச் செல்லுங்கள். அனைத்துக் காரியமும் சிறப்பாகவே இருக்கும். அதுபோலவே காலையில் எழுந்ததும் காக்கைக்கு அன்னமிட்டு இன்றைய நாளை தொடங்குங்கள். உங்களுடைய கர்ம தோஷங்கள் நீங்கி வெற்றி வாய்ப்புகளை கொடுக்கும்.

இன்று உங்களுக்கான அதிஷ்ட திசை : கிழக்கு

அதிஷ்ட எண் :  9

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் மற்றும் வெள்ளை நிறம்

துலாம் : 

துலாம் ராசி அன்பர்களே..!! இன்று தொழில் வியாபாரம் ஆகியவற்றில் எதிர்பார்த்த லாபம் இல்லாத காரணத்தால் மனக்கவலை கொஞ்சம் ஏற்படும். அதன் காரணமாக குடும்பத்தில் நிம்மதி குறையும். இன்று பண வரவு திருப்தியாக வருவதற்கு நீங்கள் கடுமையாக உழைப்பீர்கள். ஆனால் செலவு மட்டும் இருந்து கொண்டே இருக்கும். இடையூறுகள் அதிகமாகவே இருக்கும். தர்ம குணம், இரக்க குணம் ஆகியவை மேலோங்கும். எல்லாவற்றிலும் லாபம் கிடைக்காது. அதனால் கிடைத்த வெற்றியை  வைத்துக் கொண்டு அதற்கேற்றார் போல் இன்றைய நாளை நீங்கள் சரிசெய்து கொள்ளுங்கள். உடல் ஆரோக்கியம் ஓரளவு சீராக இருக்கும். மனதில் குழப்பம் இருந்து கொண்டே இருக்கும். மற்றவர்களுக்கு உதவி செய்யக்கூடிய எண்ணங்களும் இன்று இருக்கும். நன்மதிப்பையும் மற்றவர்கள் மத்தியில் பெறுவீர்கள். குடும்பத்தில் இருப்பவர்களுடன் வாக்குவாதம் இல்லாமல் பொறுமையாக பேசுங்கள். உங்கள் கோபத்தை தூண்டுவதாக சில நேரங்களில் இருக்கும். ஆகையால் அப்போது நீங்கள் கவனமாக நடந்து கொள்ளுங்கள். இன்று நீங்கள் வாக்குவாதத்தை தவிர்த்துவிட்டால் அனைத்து விஷயங்களுமே சிறப்பாக இருக்கும்.

அதுபோலவே வெளியூர் பயணங்களை மேற்கொள்வதாக இருக்கும் போது பொருட்கள் மீது கவனம் இருக்கவேண்டும். கொடுக்கல் வாங்கல் விஷயங்களில் கவனம் இருக்கட்டும். பண பரிவர்த்தனையில் கவனம் இருக்கட்டும். இன்று நீங்கள் கவனமும் பொறுமையும் நிதானமும் இருந்தால் மட்டுமே இன்றைய நாளை சிறப்பானதாக மாற்றி அமைத்துக்கொள்ள முடியும். கூடுமானவரை ஆலயம் சென்று வாருங்கள். மனம் ஓரளவு அமைதியாக இருக்கும். மாணவர்கள் இன்று கடுமையாக உழைத்துதான் பாடங்களை படிக்க வேண்டியிருக்கும். ஏதேனும் சந்தேகம் இருப்பின் தைரியமாக ஆசிரியரிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள். இன்று முக்கியமான பணியை மேற்கொள்ளும்போதோ, முக்கியமான காரியத்திற்கு செல்லும்பொழுதோ நீலநிற ஆடை அல்லது நீல நிறத்தில் கைக்குட்டையை எடுத்து செல்லுங்கள். அனைத்தும் சிறப்பாக இருக்கும். அதுபோலவே இன்று நீங்கள் கட்டாயமாக காக்கைக்கு அன்னமிட்டு இன்றைய நாளை தொடங்கினால் செய்யக்கூடிய காரியங்கள் அனைத்தும் சிறப்பாக இருக்கும். உங்களுடைய கர்ம தோஷங்களும் நீங்கும்.

இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 2 மற்றும் 7

அதிர்ஷ்ட நிறம் : நீலம் மற்றும் பச்சை நிறம்

விருச்சிகம் : 

விருச்சிகம் ராசி அன்பர்களே.!! இன்று பணவரவு எதிர்பார்த்தபடி இருக்காது. குடும்பத்தில் நிம்மதி குறையும் படியான சூழல் இருக்கும். மனைவி மகளின் ஆரோக்கியத்தில் நீங்கள் கவனமாக நடந்து கொள்ள வேண்டும். நீங்கள் வாகனத்தில் செல்லும்போது கவனமாக செல்ல வேண்டும். தொழில் முதலீடுகளை குறைப்பது நல்லது. முதலீடுகளை செய்யும்போது கொஞ்சம் யோசனை செய்து செய்யுங்கள். உங்களை விட பெரியோர்களிடம் ஆலோசனை கேட்டு செய்யுங்கள். இன்று எல்லா நன்மைகளும் நடப்பதற்கு இறைவன் வழிபாடு தேவைப்படும். தெய்வீக நம்பிக்கையும் இன்று இருக்கும். மன தைரியம் கூடும். தன்னம்பிக்கையும் விடாமுயற்சியும் உங்களை சிறப்பானதாக செய்ய வைக்கும். பணத்தேவை கொஞ்சம் அதிகமாகதான் இருக்கும். வீண்செலவு இருக்கும். மன அமைதி பாதித்தல் போன்றவை இருக்கும். இன்றைய நாள் எதிர்பார்த்த காரியம் வெற்றிகரமாக நடப்பதற்கு கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும்.

வாக்குறுதிகளை மட்டும் தயவு செய்து இன்று நீங்கள் கொடுக்க வேண்டாம் பார்த்துக் கொள்ளுங்கள். வீண் அலைச்சல் அதிகமாக இருக்கும். பயணத்தின் போது கொஞ்சம் கவனமாக செயல்படுங்கள். அதாவது நீங்கள் எடுத்துக் கொள்கின்ற பொருட்கள் மீது ரொம்ப கவனம் இருக்கட்டும். இன்று மாணவர்கள் கல்வியில் கடினப்பட்டு தான் முன்னேற வேண்டியிருக்கும். படித்த பாடத்தை ஒரு முறைக்கு இரு முறை எழுதிப் பாருங்கள். இன்று நீங்கள் முக்கியமான காரியத்திற்கு செல்லும் போதோ, முக்கியமான வேலை பார்க்கும் போதோ பச்சை நிற ஆடை அல்லது பச்சை நிறத்தில் கைக்குட்டையை எடுத்துச் செல்லுங்கள். அனைத்துக் காரியமும் சிறப்பாகவே இருக்கும். அதுபோலவே இன்று காலையில் எழுந்ததும் காக்கைக்கு அன்னமிட்டு செல்லுங்கள். இதை தயவு செய்து செய்து பாருங்கள். உங்களுக்கு நல்ல மாற்றம் தெரியும். உங்களுடைய கர்ம தோஷங்கள் நீங்கி முன்னேற கூடிய வாய்ப்புகள் கிடைக்கும்.

இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 3 மற்றும் 5

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் மற்றும் பச்சை நிறம்

தனுசு : 

தனுசு ராசி அன்பர்களே..!! தங்கள் சம்பாத்திய நிலை இன்று உயரும். அதாவது உங்களுடைய வருமானம் இன்றைக்கு பல மடங்கு உயரும். நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சியை கொடுக்கும். மிகவும் கடினமான செயலைக் கூட எளிதாக வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். அனைவரது  பார்வையிலும்  நீங்கள் பொறாமைப்பட கூடியவராக திகழ்வீர்கள். இன்று விருந்து நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். வாய்க்கு ருசியான உணவுகளை உண்டு மகிழ்வீர்கள். இன்று காரியத்தில் வெற்றி கிடைக்கும். உடலில் சோர்வு இருக்கும். வீண் பகை விலகிச்செல்லும். உங்களைக் கண்டு மற்றவர் பயப்படக்கூடிய சூழல் இருக்கும். தொழில் வியாபாரம் நல்லபடியாக நடக்கும். மெத்தனமான போக்கு மாறி வெற்றி கிடைக்கும். வாடிக்கையாளரிடம் நீங்கள் அன்பாக நடந்து கொள்வீர்கள். அந்த அன்பு ஒன்று போதும் உங்கள் வாழ்க்கையை வசமாக்கிவிடும். அதேபோல நீங்கள் மற்றவரிடம் பேசும்போது மட்டும் கொஞ்சம் பொறுமையாக பேசுங்கள்.

அது போதும் இன்று நீங்கள் செய்யக்கூடிய காரியங்கள் அனைத்துமே உங்களுக்கு மகிழ்ச்சியை கொடுக்கும். மாணவர்கள் கல்வியில் நல்ல முன்னேற்றத்தை பெறக்கூடும். அதுபோலவே மாணவர்கள் ஏதேனும் சந்தேகம் இருப்பின் தைரியமாக எழுந்து நின்று உங்கள் ஆசிரியரிடம் கேட்டுத் தெரிந்துகொள்வது நல்லது. இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும்போதோ முக்கியமான காரியத்தை செய்யும்போதோ வெள்ளை நிற ஆடை அல்லது வெள்ளை நிறத்தில் கைக்குட்டையை  எடுத்துச் செல்லுங்கள். அனைத்து விஷயங்களும் சிறப்பாக இருக்கும். அதுபோலவே நீங்கள் கட்டாயமாக காலையில் காக்கைக்கு அன்னமிட்டு வாருங்கள். உங்களுடைய கர்ம தோஷங்கள் நீங்கி வெற்றி வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்கும்.

இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 6 மற்றும் 9

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை மற்றும் சிவப்பு நிறம்

மகரம் : 

மகரம் ராசி அன்பர்களே..!! இன்று வெற்றிக்கு கடின உழைப்பு தேவைப்படும். உறவுகளின் தொல்லையால் வெறுப்பு ஏற்படும். கோபத்தால் வம்புகளை விலைக்கு வாங்காமல் இருப்பது நல்லது. கூடுமானவரை வாக்குவாதங்கள் நடக்கும் இடத்திற்கு நீங்கள் செல்ல வேண்டாம். அதேபோல நீங்கள் யாருக்கும் பஞ்சாயத்துக்கள் ஏதும் சொல்ல வேண்டாம். தயவு செய்து மிக முக்கியமாக வாக்குறுதிகள் எதுவும் கொடுக்க வேண்டாம். அதை பார்த்துக் கொள்ளுங்கள். இன்று தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்களுக்காக அலைய வேண்டி தான் இருக்கும். வாடிக்கையாளரிடம் அனுசரித்து பேசுவது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேலதிகாரிகளிடம் அனுசரித்து செல்வதன் மூலம் நன்மை கிடைக்கப் பெறுவார்கள். மனதில் சஞ்சலம் இருக்கும். வீண் பகைகள் ஏற்பட்டு விலகும். எவ்வளவு திறமையாக செயல்பட்டாலும் பாராட்டுகள் கிடைப்பதில் கொஞ்சம் கடினமான சூழலில் தான் இருக்கும். உங்களை மற்றவர்கள் குறை சொல்லக்கூடும்.

அந்த விஷயத்தில் கவனமாக நடந்து கொள்ளுங்கள். இன்று மாணவர்கள் கல்வியில் முன்னேறுவதற்கு கடுமையாக உழைத்துதான் படிக்க வேண்டியிருக்கும். படித்த பாடத்தை ஒரு முறைக்கு இரு முறை எழுதிப் பார்ப்பது நினைவில் வைத்துக் கொள்ள உதவும். அதே போல உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருப்பின் தைரியமாக எழுந்து நின்று ஆசிரியரிடம் கேட்டுத் தெரிந்துகொள்வது நல்லது. இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும்போதோ முக்கியமான காரியத்தை செய்யும்போதோசிவப்பு நிற ஆடை அல்லது சிவப்பு நிறத்தில் கைக்குட்டையை  எடுத்துச் செல்லுங்கள். அனைத்துக் காரியமும் சிறப்பாக நடக்கும். அதுபோலவே காலையில் நீங்கள் எழுந்ததும் காக்கைக்கு அன்னமிட்டு இன்றைய நாளை தொடங்கினால் அனைத்து விஷயங்களும் சிறப்பாக இருக்கும். உங்களுடைய கர்ம தோஷங்களும் படிப்படியாக குறையும்.

இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை :  வடக்கு

அதிர்ஷ்ட எண் : 5 மற்றும் 7

அதிர்ஷ்ட நிறம் : நீலம் மற்றும் சிவப்பு நிறம்

கும்பம் : 

கும்பம் ராசி அன்பர்களே..!! இன்று புனிதப் பயணங்கள் கோவில் குளம் என பக்தி மிக்க நாளாக இருக்கும். புதிய திருப்பங்கள் ஏற்பட்டு விருப்பங்கள் நிறைவேறும். உங்களுடைய புகழ் ஓங்கி இருக்கும். அரசின் ஆதரவு உண்டாகும். திடீர் கோபம் மட்டும் தலைதூக்கும். வீண்செலவு இருக்கும். குடும்பத்தில் இருப்பவர்களால் டென்ஷன் இருக்கும். கணவன் மனைவிக்கு இடையே கோபமான பேச்சை விடுத்து அமைதியாக எதையும் எடுத்துச் சொல்வது நல்லது. பொறுமையாக சொல்லுங்கள். பிள்ளைகளின் நலனுக்காக செலவு செய்ய வேண்டியிருக்கும். குடும்பத்தாரிடம் பிடிவாதத்தை தவிர்ப்பது நன்மையை கொடுக்கும். யாரிடமும் எந்த விதமான வாக்கு வாதங்கள் வேண்டாம். வெளியூர் பயணங்கள் ஓரளவு நன்மையை கொடுக்கும்.

லாபம் நல்லபடியாக வந்து சேரும். இன்று பொறுமையும் நிதானத்தை மட்டும் கடைபிடியுங்கள். அது போதும். இன்று மாணவர்கள் கல்வியில் முன்னேறுவதற்கு கடினமாகத்தான் உழைக்க வேண்டி இருக்கும். படித்த பாடத்தை ஒரு முறைக்கு இரு முறை எழுதிப் பாருங்கள் நினைவில் வைத்துக் கொள்வதற்கு உதவும். இன்று முக்கியமான பணி மேற்கொள்ளும் போது முக்கியமான காரியத்திற்கு செல்லும்பொழுது நீலநிற ஆடையஅல்லது நீல நிறத்தில் கைக்குட்டையை  எடுத்துச் செல்லுங்கள். அனைத்துக் காரியமும் சிறப்பாக இருக்கும் அதுபோலவே இன்று நீங்கள் கட்டாயமாக காக்கைக்கு அன்னமிட்டு இன்றைய நாளை தொடங்கினால் அனைத்துக் காரியமும் சிறப்பை கொடுக்கும். உங்களுடைய கர்ம தோஷங்களும் நீங்கும்.

இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 1 மற்றும் 5

அதிர்ஷ்ட நிறம் : நீலம் மற்றும் மஞ்சள் நிறம்

மீனம் : 

மீனம் ராசி அன்பர்களே..!! இன்று கடினமாக உழைத்தாலும் உயரதிகாரியிடம் நல்ல பெயரை எடுக்க முடியாது. மற்றவர்கள் இன்று உங்களை குறை சொல்லக்கூடும். பார்த்துக் கொள்ளுங்கள். நீங்கள் திட்டமிட்ட பயணத்தில் தடையும் தாமதமும் இருக்கும். கவனம் இருக்கட்டும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை வேண்டும். சரியான உணவு எடுத்துக் கொள்ளுங்கள். அது போதும். இன்று செய்யும் காரியங்களில் ஒருமுறைக்கு இருமுறை யோசித்து செய்யுங்கள். அதேபோல காரியத்தடைகள் கொஞ்சம் வந்து செல்லும் பார்த்துக் கொள்ளுங்கள். உங்களுடைய சாதுர்யமான பேச்சு வெற்றி வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுக்கும். பல பிரச்சினைகளுக்கு தீர்வை கொடுக்கும். பணம் கிடைப்பதில் தாமதம் இருக்கும். மாணவர்களுக்கு கல்வி தொடர்பான காரியங்களில் கொஞ்சம் கடினமான போக்கு இருக்கும். போட்டிகளும் இருக்கும்.

எதிர்காலம் பற்றிய சிந்தனை மேலோங்கும். புதிய நபர்கள் அறிமுகமும் அவர்களால் உங்களுக்கு ஓரளவு உதவிகளும் கிடைக்கும். அதேபோல் விஐபிகள் சந்திப்புகள் கிடைக்கும். அதனால் மகிழ்ச்சி அடைவீர்கள். பயணம் செல்ல வேண்டியிருக்கும். பயணத்தின் மூலம் லாபம் இருக்கும். இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது முக்கியமான காரியத்திற்கு செல்லும் பொழுது ஆரஞ்சு நிற ஆடை அல்லது ஆரஞ்சு நிறத்தில் கைக்குட்டையை  எடுத்துச் செல்லுங்கள். அனைத்துக் காரியமும் நல்லபடியாக நடக்கும். அதுபோலவே நீங்கள்  காலையில் எழுந்ததும் காக்கைக்கு அன்னமிட்டு இன்றைய நாளை  தொடங்குங்கள். கரும தோஷங்கள் நீங்கி காரியத்தில் வெற்றி கிடைக்கும்.

இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் :  1 மற்றும் 5

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு மற்றும் வெளிர் பச்சை நிறம்

Categories

Tech |