நாளுக்குள் கடவுள் நம்பிக்கையுடன் இணைந்து ராசி பலன்களும் மக்கள் என்ன ஓட்டத்தில் பிரதி பலிக்கின்றது . நம்முடைய வீட்டிலும் , குடும்பத்தில் எந்த செயலை தொடங்கினாலும் நல்ல நேரம், ராசி என்னவெண்று தெரிந்து கொள்ள தினம் தினம் நாள்கட்டியில் கண்டு கழிக்கும் பழக்கம் பலருக்கும் இருந்து வருகின்றது. இந்த நிலையில் மேஷ ராசி முதல் மீனம் ராசி வரை உள்ள 12 ராசிகளின் ராசிபலனை தெரிந்து கொள்ளலாம்.
மேஷம் :
மேஷம் ராசி அன்பர்களே..!! இன்று நண்பர்களுக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுவீர்கள். வாழ்வில் கூடுதல் நன்மை பெற புதிய வாய்ப்பு உருவாகும். தொழிலில் உற்பத்தி விற்பனை திருப்திகரமாக இருக்கும். உபரி பண வருமானம் கிடைக்கும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சி நடத்த திட்டமிடுவீர்கள். இன்று புண்ணிய காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். வாழ்க்கையில் எதிர்பாராத திருப்பங்களை சந்திக்க நேரிடும். எப்படிப்பட்ட பிரச்சினை வந்தாலும் சமாளித்து விடும் திறமை இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும். தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். அதே போல மனதில் மட்டும் இனம்புரியாத கவலை இருந்துக்கொண்டே இருக்கும். எதைப்பற்றியும் கவலைப்படாமல் முன்னேறிச் செல்லுங்கள். அது போதும். இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் அதிகமாகவே உழைக்க வேண்டியிருக்கும்.
முக்கிய பொறுப்புகளில் இருப்பவர்கள் கவனமாக இருப்பது நல்லது. பேசும் பொழுது கொஞ்சம் நிதானம் இருக்கட்டும். இன்று மாணவர்கள் கல்வியில் நல்ல முன்னேற்றத்தை பெறக்கூடும். ஆசிரியரிடம் பாராட்டுகளையும் பெறக்கூடும். இன்று நீங்கள் முக்கியமான காரியங்களுக்கு செல்லும்பொழுது முக்கியமான வேலை செய்யும் பொழுது பச்சை நிற ஆடை அல்லது பச்சை நிறத்தில் கைக்குட்டையை எடுத்துச் செல்லுங்கள். அனைத்துக் காரியமும் சிறப்பாக இருக்கும். அதுபோலவே இன்று செவ்வாய்க்கிழமை என்பதால் முருகன் வழிபாட்டை மேற்கொள்ளுங்கள். முருகன் வழிபாடு உங்களுக்கு சிறப்புவாய்ந்த வழிபாடாக இன்று இருக்கும்.
இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 2 மற்றும் 7
அதிர்ஷ்ட நிறம் : நீலம் மற்றும் பச்சை நிறம்
ரிஷபம் :
ரிஷபம் ராசி அன்பர்களே..!! சிலர் சுய லாபம் பெற உங்களை அணுக கூடும் பார்த்து கொள்ளுங்கள். தொழில் வியாபாரத்தில் நிலுவை பணி நிறைவேற்றுவது நல்லது. அளவான பணவரவு கிடைக்கும். பெண்கள் உறவினர்களிடம் விவாதம் பேச வேண்டாம். ஓய்வு நேரத்தில் இசை பாடலை ரசித்து மனதை அமைதியாக வைத்துக் கொள்ளுங்கள். இன்று தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டிருப்பவர்கள் வியாபார வளர்ச்சிக்காக துணிச்சலுடன் சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு முன்னேற வாய்ப்புகள் வந்து சேரும். வீடு வாகனம் போன்றவற்றை வாங்குவது புதுப்பிப்பது போன்றவற்றில் ஈடுபடுவீர்கள். குடும்பத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் மறையும்.
கணவன் மனைவிக்கு இடையே நீடித்து வந்த மன வருத்தம் நீங்கி சந்தோஷமான சூழ்நிலை காணப்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி இருக்கும். கலகலப்பும் இருக்கும். இன்று மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். சக மாணவர்களுடன் மட்டும் கொஞ்சம் கவனமாக நடந்து கொள்ளுங்கள். அது போதும். இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது, காரியத்திற்கு செல்லும் பொழுது மஞ்சள் நிற ஆடை அல்லது மஞ்சள் நிறத்தில் கைக்குட்டையை எடுத்துச் செல்லுங்கள். அனைத்துக் காரியமும் சிறப்பாக இருக்கும். அதுபோலவே இன்று செவ்வாய்க்கிழமை என்பதால் முருகனை மனதார நினைத்து வழிபடுங்கள். அனைத்து காரியங்களும் வெற்றியை கொடுக்கும்.
இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3 மற்றும் 5
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் மற்றும் நீல நிறம்
மிதுனம் :
மிதுனம் ராசி அன்பர்களே..!! உங்கள் உடல் நலத்தில் கவனம் கொள்ள வேண்டும். இன்று தொழில் வியாபாரத்தில் திட்டமிட்ட இலக்கு நிறைவேற கால அவகாசம் தேவைப்படும். சிறு அளவில் தான் பணம் வந்து சேரும். பணம் கடன் வாங்குவதற்கான சூழல் இருக்கும். புத்திரரின் அறிவுபூர்வமான செயல் மனதை மகிழ்விக்கும். இன்று மாணவர்கள் கல்வியில் முன்னேற்றம் காண்பார்கள். விளையாட்டுப் போட்டியில் வெற்றி காண்பார்கள். எந்த ஒரு விஷயத்திலும் கவனம் மட்டும் இருக்கட்டும் பார்த்துக் கொள்ளுங்கள். நீங்கள் செய்யக்கூடிய காரியத்தில் தடை தாமதம் போன்றவை இருக்கும். பொறுமை என்பது இன்று முக்கியமான நாளாக படுகின்றது. முடிந்தால் ஆலயம் செல்லுங்கள் மன மகிழ்வாக இருக்கும். அதுபோலவே எந்த காரியத்தையும் செய்யும் பொழுது அவசரம் வேண்டாம். படபடப்பும் வேண்டாம். உங்களுடைய மூச்சை ஆசுவாசப்படுத்திக்கொண்டு செய்யுங்கள் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
உறவினர் வகையில் உதவிகள் இருக்கும். தெய்வீக நம்பிக்கை இன்று கூடும். மற்றவருக்கு உதவி செய்யும் பொழுது கவனம் இருக்கட்டும். அந்த விஷயத்தில் நீங்கள் ரொம்ப முக்கியமாக கவனமாக செயல்படுங்கள். தெரியாத நபரிடம் பேச்சுவார்த்தையை குறைத்துக்கொள்வது நல்லது. இன்று எந்த காரியம் செய்வதாக இருந்தாலும் எச்சரிக்கையாகவே செய்யுங்கள். அது போதும். இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும் போது, முக்கியமான காரியத்திற்கு செல்லும் பொழுது பச்சை நிற ஆடை அல்லது பச்சை நிறத்தில் கைக்குட்டையை எடுத்துச் செல்லுங்கள். அனைத்து காரியங்களும் சிறப்பாக நடக்கும். அது மட்டும் இல்லை இன்று செவ்வாய் கிழமை என்பதால் முருக பெருமானை மனதார நினைத்து வழிபட்டு இன்றைய நாளை தொடங்குங்கள் சிறப்பாக இருக்கும்.
இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 3 மற்றும் 5
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் மற்றும் பச்சை நிறம்
கடகம் :
கடகம் ராசி அன்பர்களே..!! இன்று உங்கள் பேச்சில் சாமர்த்தியம் நிறைந்திருக்கும். தொழில் வியாபாரம் வளர்ச்சி பெற்று புதிய இலக்கை அடையும். உபரி பண வருமானம் கிடைக்கும். நீண்டகால பணக் கடனில் ஒரு பகுதியை செலுத்துவீர்கள். விருந்து விழாவில் கலந்துக் கொள்வீர்கள். இன்று எந்த ஒரு காரியத்திலும் லாபம் நஷ்டம் பார்ப்பீர்கள். விருப்பத்திற்கு மாறாக காரியங்கள் நடக்கக்கூடும். மனக்குழப்பம் கொஞ்சம் இருக்கும். பொருட்களை கவனமாக பார்த்துக் கொள்வது நல்லது. அடுத்தவருடன் சில்லறை சண்டைகள் ஏற்படக்கூடும். அந்த விஷயத்திலும் கவனமாக இருங்கள். மாணவர்கள் பாடங்களில் சந்தேகம் கேட்பதற்கு தயக்கம் காட்டாமல் இருந்தால் வெற்றி இருக்கும்.
வாகனங்களில் செல்லும் போது கொஞ்சம் கவனமாக பொறுமையாக செல்லுங்கள். தொலைபேசி வழித் தகவல் உங்களுக்கு இன்று நல்ல தகவலாக இருக்கும். அதனால் மகிழ்ச்சி கொள்வீர்கள். இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும்போது, முக்கியமான காரியத்திற்கு செல்லும் போது வெள்ளை நிற ஆடை அல்லது வெள்ளை நிறத்தில் கைக்குட்டையை எடுத்துச் செல்லுங்கள். அனைத்துக் காரியமும் சிறப்பாக இருக்கும். இன்று செவ்வாய் கிழமை என்பதால் முருக பெருமானை வழிபட்டு இன்றைய நாளை தொடங்குங்கள் அனைத்துக் காரியமும் நல்லபடியாக நடக்கும்.
இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 2 மற்றும் 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை மற்றும் நீல நிறம்
சிம்மம் :
சிம்மம் ராசி அன்பர்களே..!! இன்று புதிய அனுபவ பாடம் கற்றுக் கொள்வீர்கள். செயல்களில் திட்டமிட்டபடி நிறைவேறும். தொழில் வியாபாரம் செழிக்க கூடுதலாக தான் மூலதனம் செய்வீர்கள். நிலுவைப்பணம் எளிய முயற்சியால் வசூலாகும். உறவினர்கள் அதிக அன்பு பாசத்துடன் நடந்து கொள்வார்கள். இன்று உடல்நிலையில் கொஞ்சம் கவனம் இருக்கட்டும். வயிறு தொடர்பான பிரச்சினைகள் வரக்கூடும். பணவரவு ஓரளவு சீராக இருக்கும். பயணங்கள் மகிழ்ச்சியை கொடுப்பதாகவும் இருக்கும். தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டிருப்பவர்கள் கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும். பொறுமையை கையாளுங்கள். குடும்பத்தில் தேவையற்ற குழப்பங்கள் ஏற்பட்டு பின்னர் சரியாகும். மீண்டும் ஒருமுறை உடல் ஆரோக்கியத்தில் மட்டும் கவனம் வைத்துக் கொள்ளுங்கள். கணவன்-மனைவிக்குள் சின்ன சின்ன கருத்து வேற்றுமை வரக்கூடும்.
எந்த ஒரு விஷயத்தையும் பேசித் தீர்த்துக் கொள்ளுங்கள். அவசரம் வேண்டாம். வீண் வாக்குவாதங்களும் செய்ய வேண்டாம். இன்று மாணவர்கள் கல்வியில் கடினமாகத்தான் உழைக்க வேண்டி இருக்கும். படித்த பாடத்தை ஒரு முறைக்கு இரு முறை எழுதிப் பார்ப்பது மிகவும் சிறப்பாக இருக்கும். அப்பொழுதுதான் நினைவில் வைத்துக் கொள்ள உதவும். இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது, முக்கியமான காரியத்திற்கு செல்லும் போது ஆரஞ்சு நிற ஆடை அல்லது ஆரஞ்சு நிறத்தில் கைக்குட்டையை எடுத்துச் செல்லுங்கள் அனைத்துக் காரியமும் சிறப்பாகவே இருக்கும். அதுபோலவே இன்று செவ்வாய்க்கிழமை என்பதால் முருகப்பெருமானை வழிபட்டு இன்றைய நாளை தொடங்குங்கள். அனைத்தும் நல்லபடியாக நடக்கும்.
இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1 மற்றும் 5
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு மற்றும் வெளிர் பச்சை நிறம்
கன்னி :
கன்னி ராசி அன்பர்களே..!! நல்லவர் செயலையும் தவறாகக் கருதும் சூழல் இன்று ஏற்படலாம். தொழில் வியாபாரம் வளர்ச்சி பெறுவதற்கு கூடுதல் உழைப்பு உதவும். அளவான பணவரவு கிடைக்கும். ஒவ்வாத உணவுகளை மட்டும் தயவு செய்து உண்ண வேண்டாம். இன்று மாணவர்கள் பாதுகாப்பற்ற இடங்களில் செல்லக்கூடாது. கவனமாக இருங்கள். இன்று மன வருத்ததுடன் சென்ற உறவினர்கள் வருத்தம் நீங்கி மீண்டும் வந்துசேர்வார்கள். பயணங்கள் செல்ல நேரிடும். எந்த பிரச்சினை வந்தாலும் அதை சமாளிக்கும் திறமை இருக்கும். அடுத்தவர் நலனில் அக்கறை காட்டுவீர்கள். கணவன் மனைவிக்கிடையே இருந்த பிரச்சனைகளும் தீரும்.
பிள்ளைகள் விரும்பும் பொருட்களை வாங்கிக் கொடுத்து மகிழ்வீர்கள். அதேபோல அதிர்ஷ்ட வாய்ப்புகளும் இன்று கிடைக்கும். இன்று உறவினர் வகையில் யோகம் ஏற்படும் நாளாகவே இருக்கும். கொடுக்கல் வாங்கல் கூட சிறப்பாக இருக்கும். நீங்கள் நினைத்தது நடக்கும். இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுதோ, முக்கியமான காரியத்தை செய்யும் பொழுதோ மஞ்சள் நிற ஆடை அல்லது மஞ்சள் நிறத்தில் கைக்குட்டையை எடுத்துச் செல்லுங்கள். அனைத்தும் நல்லபடியாகவே நடக்கும். அது போலவே இன்று செவ்வாய்க்கிழமை என்பதால் முருகன் வழிபாட்டை மேற்கொள்ளுங்கள். நீங்கள் செய்யக்கூடிய விஷயங்கள் வெற்றி கிடைக்கும்.
இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 2 மற்றும் 4
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் மற்றும் நீல நிறம்
துலாம் :
துலாம் ராசி அன்பர்களே..!! இன்று செயல்களில் கூடுதல் கவனம் வேண்டும். தொழில் வியாபாரத்தில் இலக்கு நிறைவேற கால அவகாசம் தேவைப்படும். அளவான பணவரவு கிடைக்கும். முக்கிய செலவுக்கு பணம் கடன் பெறுவீர்கள். பெண்கள் இன்று நகை இரவல் கொடுக்க வாங்க வேண்டாம். இன்று சக ஊழியர்கள் மேலதிகாரிகளின் ஆதரவுடன் பணிகளைத் திறமையாகவும் செய்து முடிப்பார்கள். குடும்பத்தில் கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். பிள்ளைகளின் செயல்பாடுகள் திருப்திகரமாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் இடமாற்றம் பற்றி ஆலோசனை செய்வார்கள்.
தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு கீழ் நிலையில் உள்ளவர்களால் லாபம் உண்டாகும். இன்று எதிர்பார்த்த நிதியுதவி கிடைக்கும். மனமும் மகிழ்வாக காணப்படும். இன்று மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும்போதோ முக்கியமான காரியத்திற்கு செல்லும் பொழுதோ ஆரஞ்சு நிற ஆடை அல்லது ஆரஞ்சு நிறத்தில் கைக்குட்டையை எடுத்து செல்லுங்கள். அனைத்து விஷயங்களும் நல்லபடியாகவே நடக்கும். அது போலவே இன்று செவ்வாய்க்கிழமை என்பதால் முருகப் பெருமானை மனதார நினைத்து வழிபடுங்கள். செல்வ யோகம் பெறக் கூடிய சூழல் இருக்கும்.
இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 1 மற்றும் 3
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு மற்றும் வெள்ளை நிறம்
விருச்சிகம் :
விருச்சிகம் ராசி அன்பர்களே..!! இன்று எதிர்கால நலனில் அக்கறை கொள்ளும் நாளாக இருக்கும். நண்பரின் ஆலோசனை பயன்தரக் கூடிய அளவில் இருக்கும். தொழில் வியாபாரம் செழிக்க தேவையான மாற்றங்களைச் செய்வீர்கள். அதிக பண வரவு கிடைக்கும். வீட்டு உபயோக பொருட்களை வாங்க கூடும். இன்று குடும்ப பிரச்சினைகள் தீரும். காரியத்தில் இருந்த தடைகள் விலகி செல்லும். சோர்வில்லாமல் எப்பொழுதுமே உற்சாகமாக காணப்படுவீர்கள். உல்லாச பயணங்கள் செல்ல நேரிடும். நல்ல பெயர் ஏற்படும். சமூகத்தில் புகழும் உண்டாகும். மாணவர்கள் சக மாணவருடன் அனுசரித்து செல்லுங்கள். அது போதும். தொழில் வியாபாரத்தில் சுமாரான போக்கு காணப்படும்.
புதிய ஆர்டர்கள் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டாலும் கைக்கு வந்து சேரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் நம்பிக்கையுடன் செயலாற்றுவதன் மூலம் நன்மையை பெற முடியும். இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும் -போதோ, முக்கியமான காரியத்திற்கு செல்லும் போதோ ஆரஞ்சு நிற ஆடை அல்லது ஆரஞ்சு நிறத்தில் கைக்குட்டையை எடுத்துச் செல்லுங்கள். அனைத்து காரியமும் சிறப்பாகவே நடக்கும். அதுமட்டுமில்லை. இன்று செவ்வாய்க்கிழமை என்பதால் முருகப் பெருமானை மனதார நினைத்து வழிபடுங்கள். அனைத்து செல்வங்களையும் நாம் பெற முடியும்.
இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 6 மற்றும் 9
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு மற்றும் நீல நிறம்
தனுசு :
தனுசு ராசி அன்பர்களே..!! இன்று உங்கள் கஷ்டத்தை பிறரிடம் சொல்ல வேண்டாம். பணி நிறைவேற கூடுதலான முயற்சி அவசியம். தொழில் வியாபாரத்தில் படிப்படியாக வளர்ச்சி ஏற்படும். அளவான பணவரவு கிடைக்கும். உடல்நலத்திற்கு மருத்துவ சிகிச்சை தேவைப்படும். இன்று பணவரவு இருக்கும். இடமாற்றம் இருக்கும். வெளியூர் பயணங்கள் இருக்கக்கூடும். அலைச்சல்கள் கொஞ்சம் அதிகமாகத்தான் இருக்கும். தொழில் வியாபாரம் முன்னேற நீங்கள் கடுமையாக உழைப்பீர்கள். அரசு தொடர்பான காரியங்களில் சாதகமான பலன்கள் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் ஒரு சின்ன விஷயத்துக்காக கூட அலைய வேண்டி தான் இருக்கும். பணிச்சுமை காரணமாக திடீர் கோபம் கொஞ்சம் ஏற்படக்கூடும் பார்த்துக்கொள்ளுங்கள். கவனமாக செயல்படுங்கள்.
எந்த ஒரு விஷயத்தையும் மிக கவனமாக கையாளுங்கள். வாகனத்தில் செல்லும் போது பொறுமையாக செல்லுங்கள். இன்று மாணவர்கள் கல்வியில் சிறப்பு பெறுவதற்கு கொஞ்சம் கூடுதல் முயற்சி தேவைப்படும். பாடத்தில் மட்டும் கவனமாக இருங்கள். சக மாணவருடன் கொஞ்சம் அன்பாக நடந்து கொள்ளுங்கள். இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும் போதோ முக்கியமான காரியத்திற்கு செல்லும் போதோ நீல நிறத்தில் ஆடை அல்லது நீல நிறத்தில் கைக்குட்டையை எடுத்து செல்லுங்கள். அனைத்துக் காரியமும் சிறப்பாகவே இருக்கும். அதுபோலவே இன்று செவ்வாய்க்கிழமை என்பதால் முருகப் பெருமானை மனதார நினைத்து வழிபடுங்கள். அனைத்தும் நல்லபடியாகவே நடக்கும்.
இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3 மற்றும் 9
அதிர்ஷ்ட நிறம் : இளம் சிவப்பு மற்றும் நீல நிறம்
மகரம் :
மகரம் ராசி அன்பர்களே..!! நேர்மை மற்றும் சத்திய குணத்தை பின்பற்றக் கூடியவர்கள். சோதனைகளைத் தாண்டி உரிய நன்மை வந்து சேரும். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி பணி நிறைவேறும். உபரி பண வருமானம் கிடைக்கும். புதிய வாகனம் வாங்க கூடிய அனுகூலம் உண்டாகும். இன்று உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கட்டளை இடுகின்ற பதவிகள் கிடைக்கும். புதிய வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு வேலை கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான நிலை காணப்படும். பிள்ளைகளின் எதிர்கால நலனில் ஆர்வம் காட்டுவீர்கள். தொழில் முன்னேற்ற பாதையில் செல்லும். அதே போல் மனதில் இனம்புரியாத கவலை இருக்கும் பார்த்துக் கொள்ளுங்கள். தொழில் தொடர்பாக அலைய வேண்டியிருக்கும். வெளியூர்ப் பயணத்தின்போது பொருட்கள் மீது கவனம் இருக்கட்டும்.
கொடுக்கல் வாங்கல் விஷயங்களில் கொஞ்சம் கவனமாக இருங்கள். இன்றைய நாள் ஓரளவு சிறப்பாகவே இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் கணவன் மனைவியிடையே ஒற்றுமையும் இருக்கும். இன்று மாணவர்கள் கல்வியில் நல்ல முன்னேற்றத்தை பெறக்கூடும். இருந்தாலும் ஆசிரியர்கள் சொல்வதை கூர்ந்து கவனித்துக் கேட்டுக் கொள்ளுங்கள். இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது முக்கியமான காரியத்திற்கு செல்லும்பொழுது ஊதா நிறத்தில் கைக்குட்டை அல்லது ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். அனைத்து விஷயங்களும் சிறப்பாக இருக்கும். அது மட்டுமில்லை இன்று செவ்வாய்க்கிழமை என்பதால் முருகப் பெருமானை மனதார நினைத்து வழிபட்டு செல்லுங்கள். அனைத்து காரியமும் சிறப்பாகவே இருக்கும்.
இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 1 மற்றும் 3
அதிஷ்ட நிறம் : ஊதா மற்றும் ஆரஞ்சு நிறம்
கும்பம் :
கும்பம் ராசி அன்பர்களே..!! இன்று மனதில் தற்பெருமை குணம் ஏற்படலாம். குடும்ப பெரியவர்களின் வார்த்தைகளை மதித்து செயல்படவும். தொழில் வியாபாரம் வளர்ச்சி பெறுவதற்கு இனிய அணுகுமுறை உதவும். சுமாரான அளவில் தான் பணம் கிடைக்கும். போட்டி பந்தயத்தில் ஈடுபட வேண்டாம். இன்று யாரிடமும் எதிர்த்துப் பேசி விரோதத்தை வளர்த்துக் கொள்ளாமல் இருப்பது நன்மையை கொடுக்கும். கணவன் மனைவிக்கிடையே இருந்த பிளவு நீங்கி ஒன்று சேர்வார்கள். அதாவது ஒற்றுமை பிறக்கும். பிள்ளைகளின் எதிர்காலம் பற்றிய எண்ணங்கள் மேலோங்கும். உத்தியோகத்திலிருப்பவர்களுக்கு உழைப்பு அதிகமாகும். உத்தியோக மாற்றம் ஏற்படக்கூடும். புதிய ஆர்டர்கள் கிடைப்பதில் தாமதம் இருக்கும் பார்த்துக் -கொள்ளுங்கள். காரியங்களை நிதானமாக செய்யுங்கள். வாகனத்தில் செல்லும் போது பொறுமையாக செல்லுங்கள்.
அது மட்டும் இல்லை இன்று வாகனம் வாங்க கூடிய யோகமும் இருக்கும். அதையும் கவனத்தில் கொள்ளுங்கள். இன்று நீங்கள் செய்யக்கூடிய காரியங்கள் அனைத்துமே சிறப்பை கொடுக்கும். இன்று மாணவர்கள் கல்வியில் ஓரளவு முன்னேற்றம் பெற பாடங்களில் கவனமாக இருப்பது மிகவும் நல்லது. ஏதேனும் சந்தேகம் இருப்பின் ஆசிரியரிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள். சக மாணவரிடம் பழகும் போது கவனமாக பழகுங்கள். கூடுமானவரை நீங்கள் அன்பாகவே நடந்து கொள்ளுங்கள். இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும் போதோ, முக்கியமான காரியத்திற்கு செல்லும் பொழுதோ நீலத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். அல்லது நீல நிறத்தில் கைக்குட்டையை எடுத்துச் செல்லுங்கள். அது போலவே இன்று செவ்வாய்க்கிழமை என்பதால் முருக பெருமானை மனதார நினைத்து வழிபடுங்கள். அனைத்து விதமான செல்வங்களும் கிடைக்கும்.
இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1 மற்றும் 9
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் மற்றும் நீல நிறம்
மீனம் :
மீனம் ராசி அன்பர்களே..!! உங்கள் மனதில் அன்பும் கருணையும் இன்று அதிகரிக்கும். தொழில் வியாபாரம் செழித்து வாழ்க்கையில் வளமும் பலமும் பெறுவீர் கள். உபரி பணவரவில் குடும்பத்தில் அத்தியாவசியத் தேவை நிறைவேற்றுவீர்கள். இயன்ற அளவில் அறப்பணி செய்வீர்கள். இன்று எந்த செயலையும் தைரியமாக செய்து முடித்து பாராட்டுகளைப் பெறுவீர்கள். எதிர்பாராத செலவுகள் மட்டும் இருக்கும். வீண் அலைச்சலும் இருக்கும். வெளியிடங்களுக்கு செல்லும் போது பாதுகாப்பாக செல்லுங்கள். அதாவது பொருட்கள் மீதும் கவனம் இருக்கட்டும். மாணவர்கள் கல்வியில் வெற்றி பெறுவதற்கு கொஞ்சம் கடினமாக உழைப்பீர்கள். கஷ்டமாக பாடங்களை எல்லாம் மனம் துவளாமல் படிப்பீர்கள்.
தொழில் வியாபாரம் தொடர்பான செலவுகள் இன்று கூடுதலாகவே இருக்கும். தேவையான பண உதவி கிடைப்பதில் தாமதம் ஏற்படும். இன்று பொறுமையை கையாளுங்கள். குடும்பத்தாருடன் நீங்கள் மகிழ்ச்சியாகவே காணப்படுவீர்கள். குடும்பத்தாரின் ஒற்றுமையுடன் சில முக்கியமான பணியையும் நிறைவேற்றுவீர்கள். இன்று நீங்கள் முக்கியமான காரியத்திற்கு செல்லும் பொழுதோ முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுதோ வெள்ளை நிற ஆடை அல்லது வெள்ளை நிறத்தில் கைக்குட்டையை எடுத்து செல்லுங்கள். அனைத்து காரியமும் சிறப்பாக இருக்கும். அதுபோலவே இன்று செவ்வாய்க்கிழமை என்பதால் முருகப் பெருமானை மனதார நினைத்து வழிபடுங்கள். காரியத்தில் வெற்றி வாய்ப்பு ஏற்படும்.
இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 3 மற்றும் 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை மற்றும் இளம் மஞ்சள் நிறம்