Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

யாருக்கு அதிர்ஷ்ட வாய்ப்பு… 12 ராசி பலன் அறிய..!!

நாளுக்குள் கடவுள் நம்பிக்கையுடன் இணைந்து ராசி பலன்களும் மக்கள் என்ன ஓட்டத்தில் பிரதி பலிக்கின்றது . நம்முடைய வீட்டிலும் , குடும்பத்தில் எந்த செயலை தொடங்கினாலும் நல்ல நேரம்,  ராசி என்னவெண்று தெரிந்து கொள்ள தினம் தினம் நாள்கட்டியில் கண்டு கழிக்கும் பழக்கம் பலருக்கும் இருந்து வருகின்றது. இந்த நிலையில் மேஷ ராசி முதல் மீனம் ராசி வரை உள்ள 12 ராசிகளின் ராசிபலனை தெரிந்து கொள்ளலாம்.

மேஷம் : 

மேஷம் ராசி அன்பர்களே..!! குடும்பத்தில் பெண்களால் வீண் பண செலவுகள் கொஞ்சம் ஏற்படும். இடைவிடாத பணியின் காரணமாக வேலைக்கு உணவருந்த முடியாத நிலை ஏற்படும். எடக்கு மடக்காக பேசாமல் நாவடக்கம் இன்று தேவைப்படும். இன்று குடும்பத்தில் இருப்பவருடன் கருத்து மோதல்கள் உண்டாகலாம் .கணவன் மனைவிக்கிடையே இருந்த பூசல்கள் சரியாகும். பிள்ளைகளுக்கு தேவையான பொருட்களை வாங்குவது மற்றும் அவர்களின் நலனுக்காக பாடுபட வேண்டியிருக்கும். கலைத் துறையைச் சார்ந்தவர்களுக்கு இன்று நல்ல முன்னேற்றமான நாளாக இருக்கும். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். அதேபோல இன்று உங்களுக்கு பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும்.

எதிர்பார்த்துக் கொண்டிருந்த வெற்றி வாய்ப்புகளும் கிடைக்கும். பாராட்டுகளும் கிடைக்கும். இன்றைய நாள் உங்களுக்கு மதிப்புமிக்க நாளாக இருக்கும். அதே போல மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். ஆசிரியர்களின் சொல்படி மட்டும் நடந்துக் கொள்ளுங்கள். அது போதும். இன்று நீங்கள் வெளியே செல்லும் போது மஞ்சள் நிற அல்லது மஞ்சள் நிறத்தில் கைக்குட்டையை  எடுத்துச் செல்லுங்கள் அனைத்துக் காரியமும் சிறப்பாக இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று வியாழக்கிழமை என்பதால் குருமார்களின் வழிபாடு சிறப்பை கொடுக்கும். அதாவது சித்தர்கள் வழிபாடு உங்களுக்கு நன்மை கொடுப்பதாக அமையும். சித்தர்களை வழிபட்டு  இன்றைய நாளை சிறப்பான நாளாக மாற்றி அமைத்துக் கொள்ளுங்கள்.

இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை :  தெற்கு

அதிர்ஷ்ட எண் : 2 மற்றும் 3

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் மற்றும் வெள்ளை நிறம்

ரிஷபம் : 

ரிஷபம் ராசி அன்பர்களே..!! இன்று மற்றவர்களுக்கு உதவி புரிவதில் மன மகிழ்ச்சி அடைவீர்கள். எதிர்பார்த்த பணவரவு எதிர்பார்த்தபடி கைக்கு வந்து சேரும். தான தர்ம காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். இன்று எதிலும் கூடுதல் கவனத்துடன் மட்டும் செயல்படுங்கள். செல்வம் சேரும் சூழ்நிலையும் இருக்கும். மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் இருக்கும். சின்ன விஷயங்களுக்கு கூட அதிக உணர்ச்சி வசப்படாமல் பேசுவது நல்லது. பொறுமையைக் கையாளுங்கள் அது போதும். கொடுத்த வாக்கை காப்பாற்றி மகிழ்வீர்கள். மற்றவர்கள் நலனை அக்கறையுடன் கவனிப்பீர்கள். இன்று வரவு ் இருந்தாலும் வரவுக்கு ஏற்ற செலவு இருக்கும். வீண் அலைச்சலும் இருக்கும் பார்த்துக்கொள்ளுங்கள். கவனமாக செயல்படுங்கள்.

உடல் ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை சிறப்பாக இருக்கும். இருந்தாலும் வாகனத்தில் செல்லும்போது மட்டும் பொறுமையை கையாளுங்கள் அது போதும். இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுதோ, முக்கியமான இடத்திற்கு செல்லும் பொழுதோ நீல நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். வெற்றிகள் குவியும். இல்லையேல் கைக்குட்டையை எடுத்து கொள்ளுங்கள் அது போதும். அது மட்டுமில்லாமல் இன்று வியாழக்கிழமை என்பதால் குருமார்களின் வழிபாடு உங்களுக்கு சிறப்பை கொடுக்கும். அதாவது சித்தர்களை வழிபட்டால்   நன்மையான பலன்களை நீங்கள் அடையக்கூடும். சித்தர்கள் வழிபாடு உங்கள் வாழ்க்கையை மென்மேலும் உயர்த்தும்.

இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை :  தெற்கு

அதிர்ஷ்ட எண் : 1 மற்றும் 3

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் மற்றும் நீல நிறம்

மிதுனம் : 

மிதுனம் ராசி அன்பர்களே..!! இன்று அனைத்து பாக்கியங்களும் பெருகும் நாளாக இருக்கும். இன்று உங்கள் வீட்டில் நல்ல சிறப்பான சம்பவங்கள் நடக்கும். உங்கள் காட்டில் இன்று மழை தான். தெய்வ நம்பிக்கையும் வாழ்வில் நல்ல திருப்பங்களும்  ஏற்படும். தொழில் வியாபாரம் விருத்தி அடையும். இன்று உங்களுக்கு மிகவும் வேண்டியவர் உங்களை விட்டு விலகிச் செல்லலாம் பார்த்துக்கொள்ளுங்கள். மாற்று மதத்தினரின் உதவிகள் கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த பணவரவு இருக்கும். போட்டிகள் குறையும். புதிய நண்பர்களால் தேவையில்லாத சின்ன சின்ன பிரச்சனைகள் மட்டும் உண்டாகும். அதை மட்டும் கவனத்தில் கொண்டு அதற்கு ஏற்றார் போல் நீங்கள் நடந்துக் கொண்டால் போதும். எதிலும் எதிர்பாராத தடைகள் கொஞ்சம் இருக்கும். தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள்.

சமூகத்தில் உங்களுக்கு நல்ல மதிப்பும் மரியாதையும் உயரும். உங்களுக்கு செல்வாக்கும் இன்று பொருளாதார நிலையும் சிறப்பாக இருக்கும். உங்களை தேடி இன்று முக்கிய நபர்கள் வரக்கூடும். அதன் மூலம் நீங்கள் மகிழ்ச்சி அடைய கூடும். மாணவர்கள் மட்டும் கல்வியில் நல்ல முன்னேற்றத்தை பெறுதற்கு கடுமையாக உழைத்து பாடங்களைப் படியுங்கள். பாடத்தில்  மட்டும் கவனத்தை செலுத்துவது நல்லது. இன்று நீங்கள் வீட்டை விட்டு வெளியே செல்லும் பொழுது நீலநிற ஆடை அல்லது நீல நிறத்தில் கைக்குட்டையை எடுத்துச் செல்லுங்கள். அனைத்துக் காரியமும் சிறப்பாகவே இருக்கும். அது மட்டுமில்லை இன்று வியாழக்கிழமை என்பதால் சித்தர்கள் வழிபாடு உங்களுக்கு சிறந்த வழிபாடாக இருக்கும். சித்தர்களை மனதார நினைத்து வழிபடுங்கள். உங்களுடைய தோஷங்கள் அனைத்தும் நீங்கி செல்வ பாக்கியம் உண்டாகும்.

இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை :  கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 2 மற்றும் 3

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் மற்றும் நீல நிறம்

கடகம் : 

கடகம் ராசி அன்பர்களே..!! இன்று அன்னை நலத்தில் அக்கறை கொள்ள வேண்டிய நாளாக இருக்கும். அதிக உழைப்பின் காரணமாக தூக்கம் குறைவதால் உடல் நலம் கெடலாம். உடல் நலத்தை மட்டும் சிறப்பாக பாதுகாத்திடுங்கள். சரியான நேரத்திற்கு உணவு எடுத்துக் கொள்ளுங்கள். இன்று உடற்பயிற்சிகளை மேற்கொள்ளுங்கள் மனம் அமைதி பெறுவதற்கு உதவும். வியாபாரத்தில் எதிர்பார்த்த வரவுகள் எதிர்பார்த்த அளவு இருக்காது. கொஞ்சம் பொறுமையாக தான் செயல்பட வேண்டும். இன்று கணவன் மனைவிக்கு இடையே சிறிய வாக்குவாதம் ஏற்பட கூடும். பிள்ளைகள் உங்களை புரிந்து கொண்டு நடப்பது மட்டும் மனதிற்கு மகிழ்ச்சியை கொடுக்கும். உங்களுடைய சாமர்த்தியமான பேச்சு மூலம் காரிய வெற்றி உண்டாகும். அடுத்தவரை நம்பி பொறுப்புகளை ஒப்படைப்பதில் கவனம் இருக்கட்டும். யாரிடமும் வாக்குவாதத்தை தவிர்ப்பது மிகவும் நன்மையை கொடுக்கும்.

இன்று அக்கம்பக்கத்தில் பேசும்போது கவனமாக பேசுங்கள். நிதானமாக நடந்துகொள்ளுங்கள். இன்று வாடிக்கையாளரிடம் நீங்கள் கவனமாக நடந்து கொள்ளுங்கள். மாணவர்களுக்கு கல்வியில் நாட்டம் அதிகரிக்கும். சக மாணவருடன் பழகும் போது மட்டும் கொஞ்சம் கவனமாக பழகுங்கள். தேவையில்லாத விஷயங்களுக்காக சண்டை போடவேண்டாம் பார்த்துக்கொள்ளுங்கள். பொறுமையை கையாளுங்கள் அது போதும். இன்று நீங்கள் வீட்டை விட்டு வெளியே செல்லும் பொழுது மஞ்சள் நிற ஆடை அல்லது மஞ்சள் நிறத்தில் கைக்குட்டையை எடுத்துச் செல்லுங்கள். அனைத்துக் காரியமும் சிறப்பாக நடக்கும். இன்று வியாழக்கிழமை என்பதால் சித்தர்களை மனதார நினைத்து வழிபட்டு இன்றைய நாளை தொடங்குங்கள் சிறப்பாக இருக்கும். உங்களுடைய தோசங்கள் அனைத்தும் நீங்கும்.

இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 2 மற்றும் 6

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் மற்றும் சிவப்பு நிறம்

சிம்மம் : 

சிம்மம் ராசி அன்பர்களே..!! இன்று அரசு வழியில் பல நன்மைகளை நீங்கள் எதிர்பார்க்க கூடும். பதவி உயர்வு கிடைப்பதன் மூலமாக உங்களுடைய அந்தஸ்து உயரும். மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். இன்று புதிய முயற்சிகளில் ஈடுபட தோன்றும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் செய்யும் பணிகள் திருப்திகரமாக நடந்து முடியும். எதிர்பார்த்த இடமாற்றம் வரக்கூடும். குடும்பத்தில் இருப்பவர்கள் உங்களை அனுசரித்துச் செல்வது மனதுக்கு இதமாக இருக்கும். கடும் முயற்சிக்குப் பிறகு நீங்கள் எடுக்கும் காரியம் வெற்றியை கொடுக்கும். உஷ்ணம் சம்பந்தமான நோய் உண்டாகக் கூடும்.

ஆகையால் உடல்நிலையில் மட்டும் கவனமாக இருங்கள். வயிற்று வலி போன்றவை இருக்கும் பார்த்துக் கொள்ளுங்கள். அது போலவே சகோதரர்ரிடம் பேசும்பொழுது நிதானமாகப் பேசுங்கள். இன்று ஓரளவு சிறப்பை கொடுக்கும் நாளாக இருக்கும். இன்று வெளியிடங்களுக்கு செல்லும் போது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அல்லது கைக்குட்டையை எடுத்து செல்லுங்கள். அனைத்துக் காரியமும் சிறப்பாகவே இருக்கும். அதுபோலவே இன்று வியாழக்கிழமை என்பதால் சித்தர்களின் வழிபாடு உங்களுடைய கர்ம தோஷங்களை நீக்கி செல்வ நிலையை ஏற்படுத்திக் கொடுக்கும்.

இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 2 மற்றும் 5

அதிர்ஷ்ட நிறம் : நீலம் மற்றும் ஆரஞ்சு நிறம்

கன்னி : 

கன்னிராசி அன்பர்களே..!! இன்று உறவுகளுக்கு இடையே மனகசப்பு கொஞ்சம் உருவாகலாம். முறையற்ற வழிகளில் இன்று பணம் கொஞ்சம் வரக் கூடும். ஆனால் உங்களுடைய நேர்மையான எண்ணம் அதைத் தடுத்து விடும். கோபத்தை மட்டும் குறைத்துவிட்டால் இன்று அனைத்து விஷயங்களுமே நன்மை ஏற்படும். வழக்குகளை ஒத்திப் போடுவது நல்லது. இன்று அடுத்தவருடன் ஏற்படும் பிரச்சினைகளிலும் வாக்குவாதத்திலும் வெற்றியே உங்களுக்கு கிடைக்கும். பணவரவு சிறப்பாக இருக்கும். நீங்கள் எடுக்கக் கூடிய காரியம் வெற்றியை கொடுக்கும். அடுத்தவரை நம்பி மட்டும் நீங்கள் எந்தவிதக் காரியமும் செய்யாதீர்கள். நீங்களே முன்நின்று செய்யுங்கள். உத்தியோகத்தில் உள்ளவர்கள் ஆயுதங்கள் நெருப்பு போன்றவற்றைப் பயன்படுத்தும் போது கவனமாக பயன்படுத்துங்கள்.

மனம் மகிழும் படியான சம்பவங்கள் நடக்கும். ஓரளவு அனுகூலமாகவும் இருக்கும். இன்று உடல் பயிற்சி மேற்கொண்டு உடலையும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளுங்கள். புதிய வாய்ப்புகள் வந்து சேரும். வாய்ப்புகளை சரியான முறையில் ஆராய்ந்து அதனை பயன்படுத்திக் கொள்ளுங்கள் அது போதும். இன்று நீங்கள் வெளியில் செல்லும்பொழுது ஊதா நிறத்தில் ஆடை அல்லது கைக்குட்டையை எடுத்து செல்லுங்கள். அனைத்தும் சிறப்பாக நடக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று வியாழக்கிழமை என்பதால் சித்தர்களை மனதார நினைத்து வழிபட்டு இன்றைய நாளை தொடங்கினால் உங்களுடைய காரியம் சிறப்பாக நடக்கும். உங்களுடைய கர்ம தோசங்கள் அனைத்தும் நீங்கும்.

இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 1 மற்றும் 3

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு மற்றும் ஊதா நிறம்

துலாம் : 

துலாம் ராசி அன்பர்களே..!! இன்று கடமை தவறாது வேலைகளை சிறப்பாகச் செய்தாலும் நல்ல பெயர் இருக்காது. உங்களை மற்றவர்கள் குறை சொல்லிக் கொண்டுதான் இருப்பார்கள். ஆனால் நீங்கள் எதைப் பற்றியும் கவலைப்படாமல் உங்கள் காரியத்தை மட்டும் மேற் கொள்ளுங்கள் அது போதும். குழந்தைகளின் ஆரோக்கியத்தை பேணி காப்பது நல்லது. பயணத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இன்று உங்களுடைய கருத்துக்கு சிலர் மாற்றுக் கருத்து தெரிவிக்கக் கூடும் பார்த்துக்கொள்ளுங்கள். எதிர்த்துப் பேசாமல் அமைதியாக இருப்பதுதான் எப்பொழுதுமே புத்திசாலித்தனம். மாணவக் கண்மணிகள் எவ்வளவு திறமையாக படித்தாலும் பாடங்கள் கொஞ்சம் கடினமாகத்தான் இருக்கும். மனதை தளரவிடாமல் படிப்பது வெற்றியை கொடுக்கும். படித்த பாடத்தை ஒரு முறைக்கு இரு முறை எழுதிப் பாருங்கள். அப்போதுதான் நினைவில் வைத்துக் கொள்ள உதவும்.

வீண் கனவுகள் தோன்றும். திடீர் கோபம் ஏற்படும். மிகவும் கவனமாகப் பேசுவது மட்டும் நன்மையை  கொடுக்கும். பணம் வரும் வாய்ப்பு இருக்கும். எதிர்த்து செயல்படவர்கள் ஓரளவு ஒதுங்கி செல்வார்கள். இன்று கொடுக்கல் வாங்கல்கள் ஓரளவு நிம்மதியை கொடுக்கும். பழைய கடன்கள் அடைபடும் நாளாகவும் இருக்கும். கடன்கள் அனைத்தும் கட்டுக்குள் இருக்கும். இன்று நீங்கள் வெளியிடங்களுக்கு செல்லும் போதோ அல்லது முக்கியமான பணியை மேற்கொள்ளும் போதோ இளம் சிவப்பு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள் அல்லது கைக்குட்டையை எடுத்து செல்லுங்கள் அது போதும். நல்ல வெற்றி வாய்ப்புக்கள் கிடைக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று வியாழக்கிழமை என்பதால் சித்தர்களின் வழிபாடு உங்களுக்கு சிறப்பான வழிபாடாக அது மாற்றி அமைத்துக் கொடுக்கும். உங்களுடைய செல்வ நிலையும் உயர்த்தி கொடுக்கும். கர்ம தோஷங்களில் இருந்தும் அது உங்களை காக்கும்.

இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் :  2 மற்றும் 5

அதிர்ஷ்ட நிறம் : நீலம் மற்றும் இளம் சிவப்பு நிறம்

விருச்சிகம் :

 

விருச்சிகம் ராசி அன்பர்களே..!! இன்று வியாபாரத்தில் தன லாபம் பெருகி மனம்  மகிழ்ச்சி நிலவும். உடல் தெம்பாகி உற்சாகத்தை கொடுக்கும். புத்திர பாக்கியம் ஏற்படும். தன்னம்பிக்கை கூடுவதால் முயற்சிகள் அனைத்துமே வெற்றியை கொடுக்கும். இன்று கணவன் மனைவிக்கிடையே மகிழ்ச்சி இருக்கும். பிள்ளைகள் தொடர்பான காரியங்களை செய்து முடிக்க அலைய வேண்டியிருக்கும். உங்களது செயல்களுக்கு இருந்த முட்டுக்கட்டைகள் விலகிச்செல்லும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். பணவரவு தாராளமாக இருக்கும். எதிர்பாராத காரியத் தடைகள் விலகி செல்லும். வாகனங்களில் செல்லும்போது மட்டும் கவனமாக செல்லுங்கள்.

தொலைபேசியில் பேசிக் கொண்டு செல்ல வேண்டாம். அதை நீங்கள் பார்த்துக் கொள்ளுங்கள். கூடுமானவரை நீங்கள் நண்பரிடம் வாக்குவாதத்தை தவிர்த்துவிடுங்கள். நண்பர்கள் மூலம் இன்று முக்கியமான பணியை மேற்கொள்வதால் கொஞ்சம் நண்பரிடம் பேசும் போது நிதானத்தை மட்டும் கடைபிடியுங்கள். நீங்கள் வெளியில் செல்லும்பொழுது மஞ்சள் நிறத்தில் ஆடை அல்லது மஞ்சள் நிறத்தில் கைக்குட்டையை எடுத்துச் செல்லுங்கள். அனைத்தும் சிறப்பாக இருக்கும். அதுபோலவே இன்று சித்தர்கள் வழிபாட்டை மேற்கொள்ளுங்கள் சிறப்பான நாளாக இருக்கும். உங்களுடைய கர்ம தோசங்கள் அனைத்தும் நீங்கும்.

இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 2 மற்றும் 6

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் மற்றும் நீல நிறம்

தனுசு : 

தனுசு ராசி அன்பர்களே..!! இன்று சுமாரான நாளாகவே இருக்கும். சோதனைகளையும் சாதனைகளாக மாற்றுவீர்கள். வியாபாரம் விருத்தியாக கடினமான உழைப்பு தேவைப்படும். படிப்பில் கூடுதல் கவனம் இருக்கட்டும். இன்று மாணவர்களுக்கு கல்வியில் திறமை வெளிப்படும். கல்வியில் நாட்டம் செல்லும். வெற்றி வாய்ப்புகளை குவிக்க முடியும். தேவையான உதவிகளும் உங்களுக்கு கிடைக்கும். புதிய முயற்சிகளை தள்ளிப் போடுவது இன்று நல்லது.. காரியத்தில் தடை தாமதம் போன்றவை இருக்கும். வீண் அலைச்சலும் உண்டாகும். உங்களுடைய புத்தி சாதுர்யத்துடன் கையாளுவதால் லாபமான காலமாக அமைக்கக் கூடிய வாய்ப்புகளும் உண்டாகும். கணவன் மனைவிக்கிடையே சின்ன சின்ன வாக்குவாதங்கள் வந்து செல்லும் பார்த்துக்கொள்ளுங்கள்.

பொறுமையாக இருங்கள். எந்த பிரச்சனையையும் பேசித் தீர்த்துக் கொள்ளுங்கள் அது போதும். உங்களுடைய உறவினரிடம் பேசும் போது கொஞ்சம் கவனமாக பேசுங்கள். உறவினரிடம் கேட்ட உதவிகள் கிடைப்பதில் கொஞ்சம் காலதாமதம் ஏற்படும். அதற்கு ஏற்றார்போல் இன்றைய நாளை திட்டமிடுங்கள். இன்று நீங்கள் வெளியில் செல்லும்பொழுது வெள்ளை நிற ஆடை அல்லது வெள்ளை நிறத்தில் கைக்குட்டையை எடுத்துச் செல்லுங்கள். அனைத்தும் சிறப்பாக இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று வியாழக்கிழமை என்பதால் சித்தர்களின் வழிபாடு உங்களுக்கு மிகப்பெரிய அளவில் நல்வழிப்படுத்தும். கர்ம தோஷங்கள் நீங்கி அனைத்து காரியத்தையும் சிறப்பை ஏற்படுத்திக் கொடுக்கும்.

இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை :  வடக்கு

அதிர்ஷ்ட எண் : 5 மற்றும் 9

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை மற்றும் பச்சை நிறம்

மகரம் : 

மகரம் ராசி அன்பர்களே..!! இன்று பணவரவு அதிகரிக்கும் நாளாக இருக்கும். உங்களுடைய வாக்கு மேன்மை ஓங்கும். குடும்ப சுகம் கூடி   சந்ததி விருத்தி ஏற்படும். அரசு அதிகாரிகளுக்கு பதவி உயர்வு ஏற்படும். இன்று அனைத்து ராஜ யோகங்களும் உங்களுக்கு உண்டாகும். உடல் ஆரோக்கியம் நல்ல படியாக இருக்கும். குடும்பத்தில் ஏற்பட்ட பழைய பிரச்சினைகள் தீரும். பிரச்சனைகள் என்று வரும்பொழுது அதில் சிக்காமல் நீங்கள் சாமர்த்தியமாகவும் நழுவிச் செல்வது உங்களுக்கு சிறப்பை கொடுக்கும். மனக்கவலை ஏற்பட்டு நீங்கும். எதிர்பாராத செலவு கொஞ்சம் இருக்கும் பார்த்துக்கொள்ளுங்கள். பலவிதத்திலும் இன்று நன்மை இருக்கும். மற்றவர்களுக்காக வாதாடி வெற்றி வாய்ப்புகளையும் பெறுவீர்கள்.

புத்தி கூர்மையுடன் செயல்படுவீர்கள். தைரியம் உண்டாகும். துணிச்சலுடன் எதிர் கொள்வீர்கள். இன்று மாணவர்கள் கல்வியில் நல்ல முன்னேற்றம் அடைவார்கள். சக மாணவருடன் கொஞ்சம் பொறுமையாக நடந்து கொள்ளுங்கள் அது போதும். இன்று நீங்கள் வெளியில் செல்லும்போதோ அல்லது முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுதோ பச்சை நிற ஆடை அல்லது பச்சை நிறத்தில் கைக்குட்டையை  எடுத்துச் சொல்லுங்கள். அனைத்துக் காரியமும் சிறப்பாக நடக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று வியாழக்கிழமை என்பதால் சித்தர்களின் வழிபாடு உங்களுக்கு சிறப்பை கொடுக்கும். சித்தர்களின் வழிபாட்டை மேற்கொண்டால் கர்ம தோசங்கள் அனைத்தும் நீங்கும். செல்வ செழிப்புடன் வாழலாம்.

இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை :  கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 4 மற்றும் 5

அதிர்ஷ்ட நிறம் : பச்சை மற்றும் நீல நிறம்

கும்பம் : 

கும்பம் ராசி அன்பர்களே..!! இன்று பெரிய மனிதர்களின் சகவாசத்தால் நன்மை நடக்கும். அரசின் ஆதரவு கிடைக்கும். வளமான வாழ்க்கை வாசல் கதவை தட்டும். புகழ் ஓங்கி நிற்கும். உங்களுடைய விருப்பங்கள் அனைத்தும் கைகூடும். இன்று மற்றவருடன் வாக்குவாதங்களை தவிர்ப்பது பகை ஏற்படாமல் இருக்கும். எவ்வளவு திறமையாக செயல்பட்டாலும் பாராட்டுக்கள் கிடைக்காது. அதைப்பற்றி எல்லாம் நீங்கள் கவலைப்பட மாட்டீர்கள். சிலரின்  எதிர்பாராத பேச்சு மன வருத்தத்தை கொடுக்கலாம். கவனம் இருக்கட்டும். மற்றவர்கள் பிரச்சினைகளில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது. கோபத்தை தவிர்ப்பது நன்மை கொடுக்கும். இன்று பூர்வீக சொத்துக்கள் மூலம் வரவேண்டிய பணம் வந்துசேரும். அதுபோலவே வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.

இன்று கணவன் மனைவிக்கிடையே அன்பு இருக்கும். மாணவர்களின் கல்வியில் நல்ல முன்னேற்றம் இருக்கும். எந்த ஒரு பிரச்சினையாக இருந்தாலும் ஆசிரியரிடம் கேட்டுத் தெரிந்து கொண்டால் அனைத்து விஷயங்களும் சரியாகும். சக மாணவர்களிடம் நீங்கள் ஒற்றுமையை பேணுவது நல்லது. இன்று வெளியில் நீங்கள் செல்லும் பொழுது சிகப்பு நிற ஆடை அல்லது சிவப்பு நிறத்தில் கைக்குட்டையை எடுத்துச் செல்லுங்கள். அனைத்துக் காரியமும் சிறப்பாக நடக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று வியாழக்கிழமை என்பதால் குருபகவான் வழிபாடு சிறப்பை கொடுக்கும். அதாவது சித்தரை மனதார நினைத்து வழிபடுங்கள். சித்தர் வழிபாடு சிறப்பாக அமையும். உங்களுடைய கர்ம தோஷங்கள் அனைத்தும் நீங்கும்.

இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 1 மற்றும் 6

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் மற்றும் சிவப்பு நிறம்

மீனம் : 

மீனம் ராசி அன்பர்களே..!! இன்று உங்கள் எதிர்பார்ப்புக்கும் மேல் தனவரவு அதிகரிக்கும். எதிர்ப்புகள் குறையும். நண்பர்கள் உதவி நன்மை பயக்கும். தொழில் விரிவாக்க நடவடிக்கைகளுக்கு அரசு உதவிகள் எளிதாக கிடைக்கும். இன்று தொழில் வியாபாரம் தொடர்பான முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். அதேபோல எந்த முக்கியமான முடிவு எடுக்கும் பொழுது தீர ஆலோசித்த பின்னரே முடிவு எடுப்பது நல்லது. உத்தியோகத்தில்  இருப்பவர்கள் மேல் அதிகாரிகள், சக ஊழியர்களின் கருத்துக்கு மாற்று கருத்து சொல்லாமல் இருப்பது நன்மையை கொடுக்கும். குடும்ப பிரச்சினைகள் அனைத்தும் கட்டுக்குள் அடங்கி இருக்கும். ஆனாலும் தேவையான இடங்களில் நீங்கள் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. இன்றைய நாள்  நீங்கள் மனம் மகிழும் நாளாக இருக்கும். வெளியிடங்களுக்கு செல்லும் போது கொஞ்சம் பாதுகாப்பாக செல்லுங்கள். பொருட்கள் மீது கவனம் இருக்கட்டும். மாணவர்களுக்கு  கல்வியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். கல்வியில் நாட்டம் செல்லும். சக மாணவரிடம் அன்பாக நடந்து கொள்ளுங்கள் அது போதும். இன்று நீங்கள் முக்கியமான பணியை  மேற்கொள்ளும் போது நீல நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். அனைத்தும் சிறப்பாக இருக்கும். இல்லையேல் கைக்குட்டையை எடுத்து செல்லுங்கள். அது மட்டுமில்லாமல் இன்று வியாழக்கிழமை என்பதால் சித்தர்களின் வழிபாடு உங்களுக்கு சிறப்புமிக்க வழிபாடாக இருக்கும். கர்ம தோஷங்கள் நீங்கி  மனமும் அமைதியாக காணப்படும்.

இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 3 மற்றும் 5

அதிர்ஷ்ட நிறம் : நீலம் மற்றும் சிவப்பு நிறம்

Categories

Tech |