Categories
தேனி மாவட்ட செய்திகள்

1½ கோடி மதிப்பீட்டில்…. தார்சாலை அமைக்கும் பணிகள்…. அதிகாரியின் அதிரடி உத்தரவு….!!

பொதுமக்களின் உத்தரவின்படி சுமார் 1 ½ கோடி ரூபாய் மதிப்பீட்டில் தார்சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

தேனி மாவட்டம் மயிலாடும்பாறை அடுத்துள்ள நேருஜி நகரில் இருந்து மூலக்கடை வரை உள்ள தார்சாலை மிகவும் சேதமடைந்து இருந்துள்ளது. இதனால் அப்பகுதியில் வாகனங்களில் செல்லமுடியாமல் பொதுமக்கள் அவதியடைந்து வந்தனர். எனவே இப்பகுதியில் புதிய தார் சாலை அமைத்து தர வேண்டும் என அப்பகுதியினர் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.

அதன் அடிப்படையில் நேருஜி நகரில் இருந்து மூலக்கடை வரை சுமார் 1½ கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய தார் சாலை அமைக்க அரசு உத்தரவிட்டுள்ளது. தற்போது அப்பகுதியில் சாலை அமைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இந்நிலையில் அந்த பணிகளை ஆய்வு செய்த நெடுஞ்சாலைத்துறை உதவு கோட்ட பொறியாளர் திருமுருகன் பணிகளை விரைந்து முடித்து சாலையை பயன்பாட்டிற்கு கொண்டுவர உத்தரவிட்டார்.

Categories

Tech |