Categories
மாநில செய்திகள்

1ஆம் வகுப்பு மாணவர்களுக்கு…. ஆய்வு செய்து அறிவிக்கப்படும்…. அமைச்சர் அன்பில் மகேஷ்!!

1ம் வகுப்பு மாணவர்கள் வெகுநேரம் முகக்கவசம் அணிந்திருக்க இயலாது, அதுதொடர்பாக பின்னர் ஆய்வு செய்து அறிவிக்கப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா பெருந்தொற்று குறைந்து வந்த நிலையில், ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டன.. அதன்படி, செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் 9 முதல் 12ம் வகுப்பு வரை உள்ள பள்ளிகளுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகின்றன.. கொரோனா  வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி சுழற்சி முறையில் பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

இந்த சூழலில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக நவம்பர் 1 ஆம் தேதி முதல் 1 to  8ஆம் வகுப்பு வரையிலான பள்ளிகள் திறக்கப்படும் என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.. மேலும் பெற்றோர்கள், கல்வியாளர்கள், மருத்துவ வல்லுனர்கள் கருத்துக்களின் படியே பள்ளிகள் திறக்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.

இந்நிலையில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், 1 முதல் 8ஆம் வகுப்புக்கு திட்டமிட்டபடி நவம்பர் 1 முதல் பள்ளிகள் திறக்கப்படும்.. பள்ளிகள் திறப்பதில் எந்த மாற்றமும் இல்லை.. மறுபரிசீலனை இல்லை.. 1 முதல் 8 க்கு பள்ளிகள் திறக்கப்படும் போது ஒரு வகுப்பறையில் 20 மாணவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர்.. சுழற்சி முறையில் மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்தப்படும். 1ஆம் வகுப்பு மாணவர்கள் வெகுநேரம் மாஸ்க் அணிய முடியாது என்பதால் அது பற்றி ஆய்வு செய்து பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவித்தார்.

Categories

Tech |