மின்கட்டண போராட்டம் நடத்திய திமுக சட்டமன்ற உறுப்பினர் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கொரோனா பொது முடக்கம் காலகட்டத்தில் மின் கட்டணத்தில் முறைகேடு நடைபெற்றது என்று கூறி எதிர்க்கட்சி திமுக, தமிழக அரசை கடுமையாக விமர்சித்தது. அதுமட்டுமல்லாமல் மின் கட்டண விவகாரம் நீதிமன்றம் வரை சென்று அரசுக்கு சாதகமான முடிவை பெற்றுக் கொடுத்தது. அதே நேரத்தில் அதிமுக அரசு மின் கட்டணத்தில் கொள்ளையில் ஈடுபட்டுள்ளது.
தமிழக அரசாங்கம் மக்களிடம் கொள்ளை அடித்து உள்ளது என்றெல்லாம் கூறி தமிழகம் முழுவதும் கருப்புக்கொடி ஏந்தி மின்கட்டணத்தை எதிராக போராட்டத்தை திமுக நேற்று அறிவித்து இருந்தது. திமுக தலைவர் மு க ஸ்டாலின் அவரது இல்லத்தில் கருப்புச்சட்ட, கருப்புக்கொடி ஏந்தி போராட்டம் நடத்தினார். அதேபோல் பல பகுதிகளிலும் திமுக நிர்வாகிகள் போராட்டம் நடத்தினர்.
அந்த வகையில் திருவாரூரில் போராட்டத்தில் ஈடுபட்ட திமுக சட்டமன்ற உறுப்பினர் டிஆர்பி ராஜா, ரஜினி ஜின்னா உள்ளிட்ட 1056 மீது சட்டவிரோதமாக கூடுதல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சட்டமன்ற உறுப்பினர் மீது வழக்கு பதிவு செய்து தமிழக அரசு அதிரடி காட்டியுள்ளது திமுகவினரை அதிர்ச்சி அடையவைத்துள்ளது.