திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில், காணொலி வாயிலாக நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் 6 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
1. கொரோனா பாதிப்பால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை உள்ளிட்ட முக்கியத் தரவுகளை மறைத்த அ.தி.மு.க. அரசுக்குக் கண்டனம்.
2. கொரோனா காலத்தில் வற்றிப்போன வாழ்வாதாரத்தை , மேம்படுத்தும் வகையில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் 5000 ரூபாய் பண உதவி வழங்க வேண்டும் என அ.தி.மு.க. அரசை இந்தக் கூட்டம் மீண்டும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.
3. உயிர்த் தியாகம் செய்த கொரோனா முன்கள பணியில் ஈடுபட்ட வீரர்களுக்கு நிதியுதவி வழங்கிட வேண்டும்.
4. உள்ளாட்சிகளின் அதிகாரத்தைப் பறிப்பதைக் கைவிட்டு – அனைத்து உள்ளாட்சிகளுக்கும் உரிய நிதி வழங்கிட வேண்டும்.
5. அரசியல் கண்ணோட்டத்துடன் நடக்கும் காவல் துறை இதனை கைவிட்டுவிட்டு, நேர்மையாக நடந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறது.
6. பிற்படுத்தப்பட்டோர் – பட்டியலினத்தோர் – பழங்குடியினர் இடஒதுக்கீடுகளை முழு பொறுப்புடன் செயல்படுத்திட வேண்டும் போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.