திருவள்ளூர் அடுத்த மணவாளன் நகர் பகுதியில் விவசாயிகள் மற்றும் நெசவாளர்கள் உடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு பேசிய போது, தமிழகத்தில் அம்மாவுடைய அரசு பல்வேறு வகையிலே விவசாயிகள் உதவி செய்த காரணத்தால் இன்றைக்கு தொடர்ந்து உணவு தானிய உற்பத்திலே அதிக விளைச்சலை கொடுத்து, கிஸ்கருமான் விருதை தொடர்ந்து நம்முடைய மாநிலம் பெற்று கொண்டு இருக்கிறது.
தமிழகம் முழுவதும் பத்து மாவட்டங்களிளே வேளாண் பெருமக்கள் உற்பத்தி செய்கின்ற காய்கறி, பழங்கள் எல்லாம் சரியான முறையிலே விற்பனை செய்வதற்கு ஆங்காங்கே மிக பெரிய கூட்டுறவு சங்கத்தின் முகமாக கட்டிடத்தை கட்டி கொடுத்து இருக்கின்றோம். விவசாயிகள் உற்பத்தி செய்கின்ற காய்கறி, பழங்களை அங்கே கொண்டு போய் விற்பனை செய்ய வேண்டும்.
ஆன்லைனிலும் விற்பனை செய்யலாம். விலை கட்டுபடி ஆகவில்லை என்றால் அங்கேயே குளிர்பதன கிடங்கு இருக்கின்றது. அதில் அடுக்கி வைத்துவிட்டு வந்துவிடலாம். விற்பனை செய்த விவசாயிக்கு அங்கேயே பணப்பட்டுவாடா. விவசாயிகள் தங்குவதற்கு இடம், வியாபாரிகள் தங்குவதற்கு இடம். இப்படி பத்து மாவட்டங்களில் எல்லா வதையும் கூடிய கிடங்கு அமைக்கப்பட்டுள்ளது.
மத்திய மாநில அரசுக்கள் இணைந்து ஒவ்வொரு மாவட்டத்திற்கும் இருபது கோடி ரூபாயில் அந்த திட்டம் நிறைவேற்றப்படும் என்று நான் அறிவித்த அந்த பணியும் நடைபெற்றுக் கொள்கிறேன் என தமிழக முதல்வர் விவசாயிகளுக்கு தமிழக அரசு செய்ததை பட்டியலிட்டு பேசினார்.