Categories
மாநில செய்திகள்

1இல்ல.. 2இல்ல… 11கோரிக்கை…. மத்திய அரசுக்கு முக. ஸ்டாலின் மனு …!!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், மதுரையில் எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியின் சுற்றுச்சுவர் கட்டுமானப்பணிகள் என்பது நடைபெற்று கொண்டிருக்கிறது. மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் எய்ம்ஸ் மருத்துவ கல்லூரி கட்டுமான பணிகளை உடனடியாக தொடங்கிட வேண்டும் என்று தொடர்ந்து  வலியுறுத்தியுள்ளார்கள். அந்தவகையில் மாண்புமிகு ஒன்றிய அரசின் சுகாதாரத்துறை அமைச்சரிடத்தில் 11 கோரிக்கையின் கூடிய மனு ஒன்றையும் அளித்திருக்கிறார்கள்.

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவ கல்லூரியை உடனடியாக தொடங்குவது, கோவையில் எய்ம்ஸ் மருத்துவமனையின் உடனடியாக தொடங்குவது, அதேபோல் தமிழகத்தில் தேவையான மருத்துவ கட்டமைப்புகளை மேம்படுத்துவதற்கு என்.எச்.எம்க்கு நிதி உதவி அளிப்பது, புதிய 25 ஆரம்ப சுகாதார நிலையங்களை ஏற்படுத்த அனுமதி கோரியது, மாவட்டத்திற்கு ஒரு மருத்துவக் கல்லூரி என்பது மாண்புமிகு முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் கனவு அவர்களின் திட்டம் 2011 பிப்ரவரியில் தொடங்கப்பட்ட அந்த இலக்கு இன்னும் 6 மாவட்டங்களுக்கு செயல்படுத்தப்பட வேண்டியிருக்கிறது.

பெரம்பலூர், அதேபோல் மயிலாடுதுறை, தென்காசி, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம் போன்ற 6 மாவட்டங்களில் புதிய மருத்துவ கல்லூரிகள் தொடங்க வேண்டும் என்கின்ற வலியுறுத்தல் விடப்பட்டுள்ளது. நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு கோரபட்டிருக்கிறது. இப்படி பல்வேறு வகையான கோரிக்கைகளை மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் ஒன்றிய அரசின் கவனத்திற்கு  கொண்டு சென்றிருக்கிறார்கள் என தெரிவித்த்தார்.

Categories

Tech |