Categories
தேசிய செய்திகள்

1இல்ல… 2இல்ல… 11தடவை தோல்வி…! பின்வாங்காத மத்திய அரசு… மீண்டும் பிடிவாதம் …!!

டெல்லியில் போராடும் விவசாய சங்க பிரதிநிதிகளுடன் மத்திய அரசு மேற்கொண்ட பதினொன்றாம் கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வி அடைந்தது.

மத்திய பாஜக அரசின் வேளாண் சட்டங்களை கண்டித்து தலைநகர் டெல்லியில் பஞ்சாப், அரியானா, ராஜஸ்தான், மத்திய பிரதேசம், உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் சேர்ந்த லட்சக்கணக்கான விவசாயிகள் இரண்டு மாதங்களாக தொடர் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் நடைபெறும் இந்த போராட்டத்தால் பல விவசாயிகள் உயிரிழந்துள்ளனர். வேளாண் சட்டங்கள் தொடர்பாக விவசாய சங்க பிரதிநிதிகளுடன் மத்திய அரசு நடத்திய 10கட்ட பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிவடைந்தன.

இந்நிலையில் டெல்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் விவசாயிகளுடன் மத்திய அரசு பதினொன்றாம் கட்ட பேச்சுவார்த்தையில் மீண்டும் ஈடுபட்டது. மத்திய அரசு சார்பில் வேளாண் அமைச்சர் திரு நரேந்திர சிங் தோமர், ரயில்வே அமைச்சர் பியூஸ் கோயல் ஆகியோர் பங்கேற்றனர். அப்போது வேளாண் சட்டங்களை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என மத்திய அரசிடம் விவசாயிகள் மீண்டும் வலியுறுத்தினார். அதை ஏற்காத மத்திய அமைச்சர்கள் கூட்டத்தில் இருந்து பாதியிலேயே வெளியேறினார்.

இதன்மூலம் பதினொன்றாம் கட்ட பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் எட்டப்படாமல் தோல்வியில் முடிந்தன. அடுத்த கூட்ட பேச்சுவார்த்தைக்கான தேதி குறித்து மத்திய அரசு எதுவும் தெரிவிக்கவில்லை என விவசாயிகள் தெரிவித்தனர். இதற்கிடையே வரும் 26ஆம் தேதி குடியரசு தினத்தன்று திட்டமிட்டபடி டிராக்டர் பேரணி நடைபெறும் என விவசாய சங்கம் அறிவித்துள்ளது. வேளாண் சட்டங்களை ரத்து செய்யாமல் மத்திய அரசு தொடர்ந்து பிடிவாதம் பிடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |