Categories
அரசியல் மாநில செய்திகள்

1இல்ல…. 2இல்ல… 140க்கு இலக்கு வைத்த அமைச்சர்….. வேகம் காட்டும் தமிழக அரசு …!!

140 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் நபார்டு வங்கி நிதி உதவியுடன் 50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படும் என்று உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் பேசிய உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறையின் அறிவிப்புகளை பதில் உரையின் முடிவில் வெளியிட்டார். அப்போது தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் கட்டுமானம் மற்றும் பொறியியல் பிரிவில் உள்ள அத்தனை காலி பணியிடங்களும் நிரப்பப்படும் என்றும்  50 நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் தலா 20 லட்சம் மதிப்பீட்டில் நபார்டு வங்கி நிதி உதவிகள் கட்டமைப்பு வசதிகள் நவீனமயமாக்கப்படும் சக்கரபாணி தெரிவித்தார்.

அதேபோல் 140 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் நபார்டு வங்கி நிதி உதவியுடன் 50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படும் என்றும் கொள்முதல் செய்யப்பட்ட நெல்லை சேதமின்றி பாதுகாக்கும் வகையில் திறந்தவெளி நெல் சேமிப்பு மையங்களில் 2 கோடியே 50 லட்சம் மதிப்பீட்டில் மேற்கூரைகள் அமைக்கப்படும் எனவும் சக்கரபாணி கூறினார். நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் 2019 குறித்து அலுவலர்களுக்கு 20 லட்சம் ரூபாய் செலவில் அண்ணா மேலாண்மை பயிற்சி நிலையத்தில் பயிற்சி அளிக்கப்படும் என்றும் நுகர்வோர் விழிப்புணர்வு நிகழ்வுகளை செயல்படுத்த 50 லட்சம் ரூபாய் செலவிடப்படும் எனவும் சக்கரபாணி அப்போது அறிவித்தார்.

திருச்சி கோவையை தலைமையிடமாக கொண்டு இரண்டு காவல் கண்காணிப்பாளர் தலைமையில் புதிய மண்டலங்கள் தோற்றுவிக்கப்படும் என்றும் உதவிப் பொருள் வழங்கல்  குற்றப்புலனாய்வுத்துறை நான்கு மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு நான்கு காவல்துறை கண்காணிப்பாளர்கள் பணியமர்த்தப்படுவார்கள் எனவும் அவர் கூறினார். தலைமையிடமாகக் கொண்டு புதிய மண்டல அலுவலகம் ஒன்றை ஒரு கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்படும் என்றும் புதிதாக தோற்றுவிக்கப்பட்ட 6 மாவட்டங்களில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக மண்டல அலுவலகங்கள் தோற்றுவிக்கப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

மேலும் 25 கோடி மதிப்பீட்டில் நவீன அரிசி ஆலைகளில் உட்கட்டமைப்பு வசதிகள் மேற்கொள்ளப்படும் என்றும் திருவாரூர் கடலூர் மயிலாடுதுறை மற்றும் தேனி ஊர் மயிலாடுதுறை மற்றும் தேனி மாவட்டங்களில் நவீன அரிசி ஆலைகள் தனியார் பங்களிப்புடன் நிறுவப்படும் என்றும் அவர் கூறினார். அதேபோல் 20 கோடி ரூபாய் செலவில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கிடங்குகளில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும் என்றும் அமைச்சர் சக்கரபாணி சட்டப்பேரவையில் தெரிவித்தார்

Categories

Tech |