பிரான்ஸ் பிரதமர் மற்றும் அமைச்சர்கள் மீது போடப்பட்ட இருபதாயிரம் வழக்குகளை அந்நாட்டு நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
பிரான்ஸ் நாட்டின் சுகாதாரத்துறை அமைச்சர் ஆலிவர் வேரன், கல்வி அமைச்சர் ஜீன்-மைக்கேல் பிளாங்கர், பிரதமர் ஜீன் காஸ்டெக்ஸ் உள்ளிட்டோர் மீது பொதுமக்களால் வழக்கு தொடரப்பட்டது. பிரான்ஸ் நாட்டில் கொரோனா வேகமாக பரவி வருவதால் இவர்களின் செயல்பாடு குறித்தும் வழக்கு தொடரப்பட்டு இருந்தது.
2021 ஆம் ஆண்டில் ஜூலை மாதம் முதல் டிசம்பர் 31ஆம் தேதி வரை பதிவு செய்யப்பட்ட இந்த வழக்குகளை கோர் டி ஜஸ்டிஸ் டி லா ரிபப்ளிக் நீதிமன்றம் விசாரித்தது. சுமார் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வழக்குகளை விசாரித்த நீதிமன்றம் இந்த வழக்கின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என கூறி அனைத்து வழக்குகளையும் ரத்து செய்தது. இதனால் பிரான்ஸ் பிரதமர் ஜீன் காஸ்டெக்ஸ் மகிழ்ச்சி களிப்பில் இருந்து வருகிறார்.