சென்னையில் இன்று முதல் முழு ஊரடங்கின் போது 20,000 போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட உள்ளதாக பெருநகர காவல் ஆணையர் திரு. சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் இன்று முதல் ஒரு வாரத்திற்கு தளர்வற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளது. இதையொட்டி சென்னை உட்பட பல இடங்களில் காவல் துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னையில் முழு ஊரடங்கை கண்காணிக்கும் பணியில் 20,000 போலீசார் ஈடுபடுத்தப்பட உள்ளதாக பெருநகர காவல் ஆணையர் திரு. சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.
320 சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு வாகன தணிக்கை நடைபெறும் என தெரிவித்த காவல் ஆணையர் ஊரடங்கை மீறி வெளியே வரும் வாகனங்கள் பறிமுதல் செய்து வழக்குப்பதிவு செய்யப்படும் என்றும் ஏற்கனவே சோதனையின்போது பறிமுதல் செய்யப்படும் வாகனங்கள் நீதிமன்றங்கள் மூலம் ஒப்படைக்கப்படும் என்றும் தெரிவித்தார்.