Categories
வானிலை

1இல்ல 2இல்ல 5நாட்களுக்கு…. தமிழகத்தில் மழை வாய்ப்பு…. வானிலை மையம் முக்கிய தகவல்…!!

தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணத்தினால் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வுமையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தென்தமிழகம், வடதமிழகம், புதுச்சேரி ,காரைக்கால் பகுதிகளில் இன்றும் நாளையும் லேசானது முதல் மிதமான மழை பெய்யும். தென்தமிழகத்தில் இருந்து ராயலசீமா வரை இருக்கும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக   இந்த மழை பெய்யும் என தெரிவித்துள்ள வானிலை ஆய்வு மையம்,

27ஆம் தேதி தென்தமிழக மாவட்டங்களான புதுக்கோட்டை, திருவாரூர், காரைக்கால், தஞ்சாவூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை பகுதிகளிலும், 28 தேதி மற்றும் 29ஆம் தேதி தென்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளது. மேலும் அடுத்த 48 மணி நேரத்திற்கு சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என தெரிவித்துள்ள வானிலை ஆய்வுமையம் நகரில் சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான பெய்யக்கூடும் எனவும் செய்தி குறிப்புவையிலாக தெரிவித்துள்ளது.

 

Categories

Tech |