Categories
மாநில செய்திகள்

1இல்ல…. 2இல்ல… 505திட்டம்…. பெட்ரோல் விலை ”இப்படி செஞ்சா” குறையும் – நம்பிக்கையூட்டிய திமுக ..!!

நேற்று திமுக வெளியிட்ட தேர்தல் அறிக்கை குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அக் கட்சியின் எம்பி டிகேஎஸ் இளங்கோவன்,  தொழில் வளர்ச்சிக்கான பல திட்டங்கள் உள்ளன. முக.ஸ்டாலின்  படித்தது அதில் இல்ல சில முத்துகளை படித்தார். 505 திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. முழுமையாக படித்தால்  அனைத்து தரப்பு மக்களுக்கும் நன்மை செய்யக்கூடிய திட்டங்கள் எங்கள் தேர்தல் அறிக்கையில் இருக்கும். பெட்ரோல், டீசல் விலையை குறைப்பதாக சொல்லியது எந்த அளவுக்கு சாத்தியமாக இருக்கும் என்ற கேள்விக்கு வாட் வரியில் ஒரு சில சதவீதம் குறைத்தால் பெட்ரோல், டீசல் விலை குறைந்துவிடும்.

கச்சா எண்ணெய் விலை பாதியாக குறைந்த பிறகு கூட இவர்கள் பெட்ரோல், டீசல் அடிப்படை விலையை குறைக்க மறுக்கிறார்கள்.வரி வருவாய் மூலம் லாபமும் வருகிறது, கச்சா எண்ணெய் விலை குறைந்ததால் உற்பத்தியாகிற பெட்ரோல் விலை குறையும். இடுபொருள்கள் விலை குறைந்தால், இறுதி பொருள் விலை குறையும் இது சாதாரண விஷயம். ஆனால் இவர்கள் திட்டமிட்டு அந்த விலையை குறைக்காமல், மக்களை ஏமாற்றுகிறார்கள். எனவே நாங்கள் மக்களுக்கு நன்மை செய்வதற்காக மாநில அரசு விதிக்கும் வரியில் ஒரு சில சதவீதத்தை குறைத்தால் இந்த விலை குறைப்பு இயல்பாக ஏற்படும்.

இலங்கையில் இருந்து வந்த அகதிகள் ஏறத்தாழ 1983இல் வந்தவர்கள்,  40 ஆண்டுகாலமாக தங்கள் வாழ்வை இழந்து, இலங்கை முகாம்களிலே அடைபட்டு கிடக்கிறார்கள். அவர்களுக்கு வாழ்வுரிமை வேண்டும் என்றால்…  அவர்களுடைய பிள்ளைகள் வேலைக்கு செல்ல வேண்டும் என்றால்… படிக்க வேண்டும் என்றால்…  அவர்களுக்கு குடியுரிமை வழங்கினால் தான் சாத்தியம். அவர்களுக்கு குடியுரிமை வழங்க வேண்டும் அல்லது அவர்களை கேட்டுக்கொண்டு அவர்கள் நாட்டுக்காவது அவர்களை திரும்ப அனுப்ப வேண்டும்.

அவர்களுக்கு வாழ்க்கையை எப்படி கொடுப்பது ? அதனால் இந்த சட்டத்தை கடுமையாக நாங்கள் எதிர்த்தாலும், அந்த மக்களின் நன்மைக்காக சில செயல்களை செய்ய வேண்டியதாக இருக்கிறது. நாங்கள் அந்த சட்டத்தில் சேர்க்கை கூட சொல்லவில்லை. அவர்களுக்கு குடியுரிமை வழங்குங்கள் என்றுதான் சொல்கிறோம் என தெரிவித்தார்.

Categories

Tech |