Categories
அரசியல்

1இல்ல 2இல்ல 8மணி நேரம்…. ரவுண்ட் கட்டி விசாரணை… லஞ்சஒழிப்புத்துறை அதிரடி …!!

சொத்துக்குவிப்பு வழக்கில் சிக்கிய முன்னாள் அமைச்சரிடம் 8 மணிநேரமாக நடந்த விசாரணை நடத்தினர்.

சொத்துக் குவிப்பு வழக்கில் திமுக. முன்னாள் அமைச்சர் எம்ஆர். விஜயபாஸ்கரிடம் 8 மணி நேரம் விசாரணை நடத்திய லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள், அவர் இன்றும் விசாரணைக்கு ஆஜராக உத்தரவிட்டு உள்ளனர். சொத்துக்குவிப்பு வழக்கு தொடர்பான விசாரணைக்கு சென்னை, ஆதம்பாக்கத்தில் உள்ள ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை தலைமை அலுவலகத்தில் நேற்று காலை 11 மணிக்கு எம்ஆர். விஜயபாஸ்கர் ஆஜரானார்.

அவரிடம் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் போது கைப்பற்றப்பட்ட ஆவணங்கள், காப்பீட்டு நிறுவனங்களில் செய்யப்பட்ட முதலீடுகள் குறித்து அதிகாரிகள் கேள்வி எழுப்பினர். பல்வேறு நிறுவனங்களில் நடைபெற்ற பணப் பரிவர்த்தனை குறித்தும் சுமார் 8 மணி நேரம் எம்ஆர். விஜயபாஸ்கரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.முன்னாள் அதிமுக அமைச்சர் எம்ஆர். விஜயபாஸ்கர் வீடு,நிறுவனங்கள் மற்றும் அவர் தொடர்புடைய 26 இடங்களில் கடந்த ஜூலை 22-ஆம் தேதி லஞ்ச ஒழிப்புத் துறையினர் அதிரடியாக சோதனை நடத்தினர்.

அதில் கணக்கில் வராத 25,56,000 ரூபாய் ரொக்கமும், பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்து ஆவணங்கள் காப்பீட்டு நிறுவனங்களில் செய்யப்பட்ட முதலீடுகள் தொடர்பான ஆவணங்களையும், அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இது தொடர்பான விசாரணைக்கு கடந்த மாதம் 19ஆம் தேதி ஆஜராகுமாறு எம்ஆர். விஜயபாஸ்கருக்கு சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால் உள்ளாட்சித் தேர்தலை காரணம் காட்டி அப்போது ஆஜராகாத எம்ஆர். விஜயபாஸ்கர் 2 -வது சம்மன் அனுப்பியதும் நேரில் ஆஜராகி விளக்கம் கொடுத்துள்ளார்.

Categories

Tech |