கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் ஒரு ஆயுதமாக முக கவசம் இருந்து வருகின்றது. இந்நிலையில் அனைவருக்கும் இலவச முக கவசம் வழங்கும் திட்டத்தை தமிழக முதல்வர் இன்று காலை தொடங்கி வைத்த நிலையில் உணவுத்துறை அமைச்சர் காமராஜ் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் குடும்ப அட்டையில் பெயர் உள்ள அனைவருக்கும் தலா இரண்டு முகக் கவசங்கள் ரேஷன் கடைகளில் வழங்கப்படும். ஆகஸ்ட் 5-ஆம் தேதி முதல் ரேஷன் கடைகளில் இலவச கவசங்களை பெற்றுக் கொள்ளலாம் ஆகஸ்ட் 1,3,4 ஆகிய தேதிகளில் வீடு வீடாக சென்று இந்த முக கவசங்கள் வழங்கப்படும் என்று தெரிவித்தார்.