தமிழ்நாட்டில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையில் செய்தியாளர்களிடம் இதனை தெரிவித்த வானிலை ஆய்வு மையத்தின் இயக்குனர் புவியரசன், தென்கிழக்கு வங்கக் கடல் முதல் தமிழக கடலோர பகுதி வரை வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதாக தெரிவித்தார். இந்நிலையில் நாளை தெற்கு வங்கக்கடல் பகுதியில் புதிய குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகக் கூடும் என்றும் அடுத்த 24 மணி நேரத்தில் அது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்றும் அவர் கூறியுள்ளார்.
இதன் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் செங்கல்பட்டு, விழுப்புரம்,கடலூர், புதுச்சேரி மற்றும் டெல்டா மாவட்டங்களில் மிககன மழை பெய்யும் என்று புவியரசன் தெரிவித்திருக்கிறார். தெற்கு வங்க கடல் பகுதியில் ஒரு புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு தொகுதி உருவாகக்கூடும். அதனைத் தொடர்ந்து 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து தமிழக கரையை நெருங்கும்.
இதன் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், புதுச்சேரி, டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கன முதல் மிக கனமழையும் திருவண்ணாமலை, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், தர்மபுரி, கோயம்புத்தூர், கரூர், நாமக்கல், திருச்சி, சிவகங்கை, மதுரை, ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். திருநெல்வேலி, தென்காசி, தேனி நீலகிரி கோவை மாவட்டங்களில் நாளை மிக பலத்த மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சூறாவளி காற்று மணிக்கு 40 கிலோ மீட்டர் 60 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக் கூடும் என்பதால் தெற்கு ஆந்திரா,தமிழக கடலோர கடற்கரையை ஒட்டிய இலங்கை கடற்கரை குமரிக்கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்தில் வீசிய வாய்ப்பு உள்ளதால் மீனவர்கள் அடுத்த 3 நாட்களுக்கு தெற்கு ஆந்திரா கடற்கரை, தமிழக கடற்கரை, அதனை ஒட்டி இலங்கை கடற்கரை பகுதிகள், குமரிக்கடல் மன்னர் வலைகுட பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.
நவம்பர் 10 மற்றும் 11-ம் தேதிகளில் தமிழ்நாட்டில் 20 செ. மீ மேல் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையை பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நாளை மறுநாள் சென்னையில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.