Categories
சினிமா தமிழ் சினிமா

1கோடி கனவு தானே…! 1லட்சத்துக்கு நாங்க பொறுப்பு…. களமிறங்கிய விஜய் ஃபேன்ஸ் ..!! …!!

நடிகர் விவேக் யாருமே எதிர்பார்க்காத வகையில் ஹார்ட் அட்டாக் காரணமா காலம் ஆகிட்டாரு, அவரோட இறப்பை இன்னும் யாராலையும் ஏத்துக்க முடியல .

விவேக் திரைப்பட நடிகர் மட்டும் இல்லாமல், சமூக செயற்பாட்டாளரும் கூட. மறைந்த இந்திய ஜனாதிபதி அப்துல்கலாம் பெயரில் கிரீன் கலாம் என்கிற அமைப்பை உருவாக்கி அது மூலமாக இப்போது வரைக்கும் முப்பத்தி மூன்று லட்சம் மரக்கன்றுகளை நட்டு வச்ச விவேக்,  தன்னுடைய ஒரு கோடி மரக் கன்றுகள் நடுகின்ற கனவை நிறைவேற்றுவதற்கு முன்னாடியே இறந்துட்டாரு. அவரோட இறுதி சடங்கில் பல ரசிகர்கள் கையில மரக்கன்றோடு கலந்துகிட்டாங்க.

இந்த நிலையில், விவேக்கின் ஒரு கோடி மரக் கன்றுகள் நடுற கனவுல ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடுவதாக காஞ்சிபுரம் விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்தவர்கள் உறுதிமொழி எடுத்துருக்காங்க. கூடிய சீக்கிரம் தமிழ்நாடு முழுக்க உள்ள விஜய் மக்கள் இயக்கம் ஒவ்வொரு, மாவட்டத்திலும் மரக்கன்று நட இருக்காங்க. விஜய் ரசிகர்களின் இந்த செயலை மக்கள் எல்லாரும் பாராட்டிட்டு வராங்க.

Categories

Tech |