பிரான்சில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்து வருகிறது.
உலக நாடுகளில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கையின் வரிசையில் பிரான்ஸ் 6வது இடத்திலும் இறப்பு எண்ணிக்கையின் வரிசையில் 7வது இடத்திலும் உள்ளது. பிரான்சில் இதுவரை 3,079,943 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 74,106 பேர் இதுவரை பலியாகியுள்ளனர்.கடந்த 24 மணி நேரத்தில் 22,086 பேருக்கு புதிதாக தொற்று ஏற்பட்டுள்ளது. மேலும் 417 பேரின் இறப்பு பதிவாகியுள்ளது.
இந்நிலையில் பிரான்சில் இதுவரை 1,092,958 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. ஆனால் இது நாட்டின் மக்கள் தொகையில் 2 சதவீதம் கூட இல்லை. இந்நிலையில் கொரோனா தொற்று மிகவும் வேகமாக பரவி வருவதால் மருத்துவர்கள் பிரான்சில் மூன்றாவது ஊரடங்கு போட கோரிக்கை விடுக்கின்றனர். ஆனால் இதுகுறித்து அந்நாட்டு அதிபர் இம்மானுவேல் மக்ரோன் ஊரடங்கு குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது என்று தெரிவித்து வருகிறார்.
பிரான்சில் கடந்த இரண்டு மாதங்களில் இல்லாத அளவிற்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் 3,081 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலை தொடர்ந்தால் பிரான்சில் மூன்றாவது தேசிய ஊரடங்கு பிறப்பிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.