Categories
மாவட்ட செய்திகள்

1மணி நேரம் படமெடுத்த நின்ற பாம்பு… திக்திக்கான சீர்காழி – சிதம்பரம்… உறைந்து போன வாகன ஓட்டிகள் …!!

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள தேசிய நெடுஞ்சாலைக்கு நடுவே பாம்பு ஒன்று படமெடுத்தது அந்த பகுதியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

புத்தூர் பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலை நடுவே நேற்று முன்தினம் நல்ல பாம்பு ஒன்று படமெடுத்து நின்றது. இதனால் அந்த வழியாக சென்ற இருசக்கர வாகனம் முதல் பேருந்து,  லாரிகள் வரை இருபுறமும் நிறுத்தப்பட்டன. வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் சூழ்ந்து நின்ற போதிலும் எதற்கும் அசையாமல் சுமார் ஒரு மணி நேரம் வரை பாம்பு சாலையிலேயே படமெடுத்து நின்றது. பின்னர் வாகனங்கள் புறப்பட தொடங்கியதால் மெதுவாக வயல் பகுதியில் பாம்பு சென்று மறைந்தது. இதனால் சீர்காழி – சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Categories

Tech |