Categories
அரசியல் மாநில செய்திகள்

1மூட்டை கூட வரல…! இனி எல்லாமே வரும்…. திமுக அமைச்சர் உறுதி …!!

நேரடி நெல் கொள்முதல் ரகங்களில் அனைத்து ரக நெல் மூட்டைகளும் கொள்முதல் செய்யப்படும் என உணவு பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி உறுதியளித்துள்ளார். தமிழக சட்டப்பேரவையில் கூட்டுறவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது பேசிய முன்னாள் அமைச்சர் காமராஜ், டெல்டா மாவட்டங்களில் விவசாயிகள் விளைவித்த டிகேஎம் 9 ரக நெல் ஒரு மூட்டை கூட இதுவரை நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்பட வில்லை என்றார். அதற்கு பதிலளித்துப் பேசிய உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, தமிழக விவசாயிகள் விளைவிக்கக்கூடிய அனைத்து ரக நெல் மூட்டைகளையும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் அரசு கொள்முதல் செய்யும் என்று தெரிவித்தார்

Categories

Tech |