Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

தரக்குறைவாக பேசிய அதிகாரி…. தொழிலாளர்கள் போராட்டம்…. ராணிப்பேட்டையில் பரபரப்பு….!!

ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் 100 நாள் திட்ட தொழிலாளர்கள் திடீரென முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அரக்கோணம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட உளியம்பாக்கம் கிராமத்தில் மத்திய அரசின் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைத் திட்டத்தின் கீழ் 100 நாள் வேலை நடைபெற்று வருகிறது. இதில் விவசாய கூலி தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். இந்தப் பணிகளை மேற்பார்வை செய்ய வரும் விஜயா என்பவர் வயதில் மூத்தவர்களை தரக்குறைவாக பேசுவதாக கூறப்படுகின்றது.

இதனால் ஆத்திரமடைந்த 50-க்கும் அதிகமான தொழிலாளர்கள் மற்றும் ஒன்றிய பா.ஜ.க விவசாய அணி தலைவரான ஜெ.ஷியாம்குமார் ரெட்டி ஆகியோர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் முன்பாக முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். இதனை அடுத்து வட்டார வளர்ச்சி அலுவலர் ஜோசப் கென்னடி போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது மேற்பார்வையாளர் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததன் காரணத்தினால் அவர்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றுள்ளனர்.

Categories

Tech |