தூங்கி கொண்டிருந்த பெண்ணிடம் 1௦ கிராம் தங்க சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.
தென்காசி மாவட்டத்தில் உள்ள காசிநாதபுரம் அருந்ததியர் பகுதியில் பால்துரை என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் இவரின் மனைவி இரவு நேரத்தில் வீட்டில் தூங்கிக் கொண்டிருக்கும் போது மர்ம நபர் ஒருவர் கதவை உடைத்து வீட்டுக்குள் புகுந்து அவரின் கழுத்தில் கிடந்த 10 கிராம் தங்க சங்கிலியை பறித்து விட்டு தப்பி ஓடியுள்ளார்.
இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைவாக சென்று விசாரணை நடத்தி உள்ளனர். மேலும் தூங்கி கொண்டிருந்த பெண்ணிடம் நகையை பறித்து சென்ற மர்ம நபரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.