கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த தேன்கனிக்கோட்டை டிஜி தோட்டை கிராமத்தில் வசித்து வரும் முனியப்பா என்பவர் 100 வயதை கடந்தவர். அவரின் மனைவி குண்டம்மா என்கின்ற மாரம்மாவுக்கு 96 வயது ஆகின்றது. ஆரோக்கியத்துடன் வாழ்ந்து வரும் இவர்களுக்கு நூற்றாண்டு விழாவை குடும்பத்தினர் கொண்டாடினர்.
தேன்கனிக்கோட்டை கதி லட்சுமி மற்றும் நரசிம்ம சுவாமி கோவிலில் இந்த தம்பதியினருக்கு புரோகிதர்கள் வேத மந்திரங்கள் முழங்க கெட்டிமேளம் கொட்டி மாலைகள் அணிவித்து வைர விழா திருமணம் நடைபெற்றது. நூறு வயதைக் கடந்த தம்பதியினரிடம் மகன்கள், மருமகன்கள், பேரன், பேத்திகள்,கொள்ளு பேரன் மற்றும் எள்ளு பேரன் என ஐந்து தலைமுறையினர் மற்றும் ஊர் மக்கள் அனைவரும் கலந்து கொண்டு ஆசி பெற்றனர்.