Categories
சென்னை மாவட்ட செய்திகள்

1 ஆண்டுக்கு தள்ளி வைக்கப்பட்ட திருமணம்…. மாப்பிள்ளையுடன் பேசிய இளம்பெண்…. பின் நடந்த அதிர்ச்சி சம்பவம்….!!

திருமணம் நிச்சயக்கப்பட்ட இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மாவட்டத்திலுள்ள வியாசர்பாடி பகுதியில் உசேன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சமீரா பேகம் என்ற மகள் இருந்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு சமீராவிற்கு ரேணிகுண்டாவை சேர்ந்த உறவினர் ஒருவருடன் திருமணம் நடத்த அவரது பெற்றோர் நிச்சயம் செய்துள்ளனர். இதனையடுத்து உசேன் திடீரென இறந்து விட்டதால் சமீராவின் திருமணம் ஒரு ஆண்டுக்கு தள்ளி வைக்கப்பட்டது. இந்நிலையில் நிச்சயம் செய்த மாப்பிள்ளையுடன் சமீரா செல்போனில் பேசிக் கொண்டிருந்தார்.

அதன்பின் தனது வீட்டு மாடியில் சமீரா தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சமீராவின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |