Categories
தேசிய செய்திகள்

1 ஆம் வகுப்பு முதல் பள்ளிகள் திறப்பு… முதல்வர் அதிரடி உத்தரவு…!!!

நாடு முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வரும் நிலையில்,பெரும்பாலான மாநிலங்களில் பள்ளிகள் திறப்பு குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டு வருகிறது. இந்நிலையில் கேரளாவில் நவம்பர் மாதம் 1 ஆம் வகுப்பு முதல் 7 ஆம் வகுப்பு வரை பள்ளிகளை திறக்க அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது.

முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில், 1 முதல் 7-ஆம் வகுப்பு வரை மற்றும் 10 முதல் 12 ஆம் வகுப்புகளை நவம்பர் 1ஆம் தேதி திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மற்ற வகுப்புகளை நவம்பர் 15ஆம் தேதி திறக்கலாம் என முடிவு செய்துள்ளார். பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களை கருத்தில் கொண்டு பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. கொரோனா கட்டுப்பாட்டு வழிமுறைகளை பின் பற்ற ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் இதர பணியாளர்கள் அனைவரும் செயல்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Categories

Tech |