தற்போதைய காலகட்டத்தில் அனைவரும் செல்போன் பயன் படுத்தி வருகிறார்கள். தங்களின் அன்றாட வாழ்க்கையில் செல்போன் என்பது ஒரு இன்றியமையாத பொருளாக மாறிவிட்டது. அவ்வாறு செல்போன் பயன்படுத்தும் பயனாளர்கள் அனைவரும் தங்கள் தேவைக்கு ஏற்றவாறு பல்வேறு செயலிகளை பயன்படுத்தி வருகின்றனர். அதிலும் குறிப்பாக வாட்ஸ்அப், ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற செயலிகள் அதிக அளவு பயன்படுத்தப்படுகின்றன. அதில் வாட்ஸ் அப் செயலி அனைத்து விதமான உரையாடல்களும் பயன்படுத்தப்படுகிறது.
இதனையடுத்து வாட்ஸ்அப் தனது பயனாளர்களுக்கு அவ்வப்போது புதிய வசதிகளை அறிமுகம் செய்து கொண்டே வருகிறது. அதன்படி ஒரே சமயத்தில் 8 பேருடன் வீடியோ காலில் உரையாடும் வகையிலான புதிய join call வசதி வாட்ஸ் அப்பில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த வசதியின் மூலம் பயனாளி ஒருவர் உரையாடலின் நடுவே வெளியேறினால் மீண்டும் இணைந்து கொள்ள முடியும். இந்தப் புதிய அப்டேட் இன்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. இது வாட்ஸ்அப் பயனாளிகள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.