Categories
மாநில செய்திகள்

1 இல்ல 2 இல்ல!…. கும்பலாக சிறுவனை சுற்றிவளைத்த நாய்கள்…. திக்… திக்.. நிமிடங்கள்…..!!!!

கரூர் மாவட்டம் பள்ளப்பட்டி அடுத்த லிங்கமநாயக்கன்பட்டி ஊராட்சி பகுதியில் நாய்கள் தொல்லை அதிகமாக இருக்கிறது என்று பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தொடர் குற்றச்சாட்டுகளை வைத்து வருகின்றனர். இந்த நிலையில் எட்டு நாய்களுக்கு மேல் ஒன்று சேர்ந்து, ஒரு சிறுவனை விரட்டும் காட்சி காண்போரை பதைப்பதைக்க வைத்துள்ளது. இந்த வீடியோவானது இப்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இதற்கிடையில் அருகில் இருந்தவர்கள் உதவியதால் அச்சிறுவன் உயிர் தப்பினார். இந்த சம்பவம் குறித்து அதிகாரிகள் உடனே நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. லிங்கமாநாயக்கன்பட்டி ஊராட்சி உடனே நடவடிக்கை மேற்கொண்டால் இதுபோன்ற அசம்பாவிதங்களை தவிர்க்கலாம் என்பது பொதுமக்கள் மற்றும் சமூகஆர்வலர்கள் குற்றச்சாட்டாக இருக்கிறது. இச்சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் உடனே உதவியதால் சிறு காயங்களுடன் சிறுவன் உயிர் தப்பினார்.

 

Categories

Tech |