Categories
தேசிய செய்திகள்

1 இல்ல 2 இல்ல!…. 10 கோடி கோவிஷீல்டு டோஸ்கள்…. சீரம் நிறுவனம் வெளியிட்ட தகவல்….!!!!

இந்தியாவில் கொரோனா தொற்று குறைந்துவிட்ட நிலையில், பூஸ்டர் தடுப்பூசி போடுவதில் மக்களிடம் ஆர்வம் இல்லை. வளரும் நாடுகளின் தடுப்பூசி உற்பத்தியாளர்கள் அமைப்பின் வருடாந்திர பொதுக்கூட்டம் நேற்று புனேவில் நடந்தது. இக்கூட்டத்தில் சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா நிறுவனத்தின் உரிமையாளரும், தலைமை நிர்வாக அதிகாரியுமான ஆதார் பூனவல்லா கலந்துகொண்டார்.

இந்நிலையில் அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது “நாங்கள் சென்ற டிசம்பர் முதலே கோவிஷீல்டு தயாரிப்பை நிறுத்திவிட்டோம். இதனால் அப்போது கையிருப்பிலிருந்த சுமார் 10 கோடி டோஸ்கள் காலாவதியாகி வீணாகி விட்டது. பூஸ்டர் தடுப்பூசிகள் செலுத்திக் கொள்வதில் இப்போது மக்களிடையே ஆர்வம் இல்லை. இதன் காரணமாக  பூஸ்டர் தடுப்பூசிகளுக்கு தேவையில்லை.

நாங்கள் ஒமிக்ரான் தொற்று பரவலை தடுக்கும் அடிப்படையில் தடுப்பூசி தயாரிப்பில் அமெரிக்காவின் நோவாவேக்ஸ் நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்துள்ளோம். எங்களின் கோவாவேக்ஸ் தடுப்பூசி அதன் செயல் திறனுக்குரிய சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. இந்த பூஸ்டர் தடுப்பூசியானது அடுத்த 10-15 நாட்களில் ஒப்புதல் பெற வாய்ப்புள்ளது” என்று அவர் கூறினார்.

Categories

Tech |