ஸ்காட்லாந்தில் உள்ள டம்பர்டன் என்ற ஒரு டவுனில் 1895ல் ஒரு பாலம் கட்டி இருக்கிறார்கள். அந்த பாலத்தை யார் கட்டினார்கள் என்று தெரியவில்லை. ஆனால் அதை கட்டிய 50 வருடத்தில் வினோதமான விஷயங்கள் எல்லாம் நடைபெற ஆரம்பித்தது. அதாவது யாரோ ஒருவர், ஒரு குழந்தையை அந்த பலத்திற்கு அருகில் கொண்டு வந்துள்ளார். இதையடுத்து அந்த குழந்தையை பாலத்தில் இருந்து தூக்கிப்போட்டுவிட்டு, அவரும் தற்கொலை செய்து கொண்டார். ஏதோ ஒரு காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டார் என்று நினைக்கப்பட்டது. இந்த சம்பவம் நடந்து ஒரு வருடத்திற்கு பின் சம்பந்தமே இல்லாத ஒரு நாய் அந்த பாலத்தின் மேல் ஏறி நின்று உள்ளது. இதனை யாரும் கண்டுகொள்ளவில்லை.
ஆனால் சிறிது நேரத்தில் அந்த நாய் அங்கிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டது. அதன்பின் மறுநாள் அதேபோன்று மற்றொரு நாய் பாலத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டது. 1960 வரைக்கும் 150க்கும் மேற்பட்ட நாய்கள் வரை சம்பந்தமே இல்லாமல் பாலத்தின் மீது ஏறி குதித்து தற்கொலை செய்து கொண்டது. இதுபோன்ற சம்பவங்கள் ஏன் நடைபெறுகிறது என்பதற்காக ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது. எனினும் அதற்கான காரணம் தெரியவில்லை. தற்போது வரைக்கும் 600 நாய்கள் பாலத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.