Categories
தேசிய செய்திகள்

1 இல்ல 2 இல்ல 1000 போலீசாருக்கு கொரோனா…. வெளியான அதிர்ச்சி ரிப்போர்ட்….!!!!

டெல்லியில் கூடுதல் ஆணையர் உட்பட ஆயிரம் போலீசாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு உச்சம் தொட்டு வரும் நிலையில்,  அதிக அளவாக கடந்த 24 மணிநேரத்தில் 22,751 பேருக்கு நேற்று கொரோனா உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது. இந்நிலையில் போலீசாருக்கு அதிக அளவில் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. டெல்லியில் காவல் நிலைய தலைமையகங்கள் உட்பட அனைத்து காவல் நிலைய போலீசாருக்கும் அதிகளவில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.

டெல்லியில் காவல் நிலைய தலைமையகங்கள் உள்பட அனைத்து பிரிவு மற்றும் அனைத்து காவல் நிலைய போலீசாருக்கும் அதிகளவில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.இவர்களில், மக்கள் தொடர்பு அதிகாரி மற்றும் கூடுதல் ஆணையாளர் சின்மோய் பிஸ்வால் உள்பட ஆயிரம் போலீசாருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. அவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர் என டெல்லி போலீசார் தெரிவித்து உள்ளனர்.

Categories

Tech |