Categories
உலக செய்திகள்

1 இல்ல 2 இல்ல…. 20 ஆயிரம் முறை…. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய இளைஞன்….!!!!!

அமெரிக்க நாட்டின் ஓஹியோ மாகாணத்தில் 20 வயது இளைஞர் மீது ஆயிரக்கணக்கான தேனீக்கள் கொட்டப்பட்ட பின், அவர் தற்போது வென்டிலேட்டரில் உயிர் ஆதரவில் இருப்பதாக அவரது குடும்பத்தினர் மற்றும் உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கிறது. ஆஸ்டின் பெல்லாமி (Austin Bellamy) என்ற அந்த இளைஞன் சென்ற வாரம் வெள்ளிக்கிழமை தன் நண்பருக்காக எலுமிச்சை மரங்களை வெட்டிக்கொண்டிருந்தார்.

அப்போது தவறுதலாக தேனீக் கூட்டில் வெட்டப்பட்டதால் ஆயிரக்கணக்கான தேனீக்கள் அவரது முகம், கழுத்து என தலையை மொத்தமாக சூழ்ந்து கொட்டியுள்ளது. அவரது உடல் முழுதும் குறைந்தது 20,000 முறை தேனீக்கள் கொட்டப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தற்போது இளைஞன் மருத்துவமனையில் வென்டி லேட்டரில் இருக்கிறார் என்று அவரது தாயார் ஷவ்னா கார்ட்டர் கூறியுள்ளார். அத்துடன் இளைஞன் மருத்துவச் செலவுகளைச் செலுத்துவதற்காக அவர் ஆன்லைன் நிதிதிரட்டும் பக்கத்தை தொடங்கியுள்ளார்.

இதற்கிடையில் பெல்லாமியின் குடும்பத்தினர் தரையில் இருந்தபடி அவருக்கு நடந்ததை பார்த்துள்ளனர். அவர்களும் தாக்குதலுக்குள்ளானதால் இளைஞனை காப்பாற்ற முயற்சி செய்ய முடியவில்லை. பெல்லாமி சுமார் 30 தேனீக்களையும் உட்கொண்டதாகவும், அதனை அகற்ற மருத்துவர்கள் ஒரு நாளுக்கு மேல் எடுத்ததாகவும் கூறப்படுகிறது. அதிர்ஷ்டவசமாக அவர் முழுமையாக குணமடைவார் என மருத்துவர்கள் எதிர்பார்க்கின்றனர் என அவரது தாயார் ஷவ்னா கார்ட்டர் கூறியுள்ளார்.

Categories

Tech |