தொழிற்சங்கங்கள் நடத்தும் இரண்டு நாள் வேலை நிறுத்தப் போராட்டத்தின் மையக்கருத்தாக “மக்களை காக்க, நாட்டை காக்க” என்பது ஆகும். மத்திய அரசின் தனியார்மயமாக்கல், அரசு சொத்துக்களை விற்றல், எரிபொருட்களின் விலை உயர்வு, எஸ்மா சட்டம், பிஎப் வட்டி குறைப்பு உள்ளிட்ட கொள்கைகளை கண்டித்தும், நூறு நாள் வேலைத் திட்டத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு, ஏழைகளுக்கு மாதம் 7,500 உதவித்தொகை பழைய ஓய்வூதியத் திட்டம் உள்ளிட்டவற்றை கோரியும் வேலைநிறுத்தம் நடைபெற உள்ளது.
அதன்படி மத்திய அரசை கண்டித்து மார்ச் 28, 29 ஆகிய இரண்டு நாட்களில் நாடு தழுவிய வேலை நிறுத்த போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் 20 கோடிக்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்பதால் பல்வேறு பணிகள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. இதுபற்றி அரசுக்கும், நிறுவனங்களுக்கும் முறையான நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. காங்கிரஸ், திமுக, இடதுசாரிகள் உள்ளிட்ட பாஜக அல்லாத கட்சிகளின் பெரும்பாலானவை இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளன.