Categories
சினிமா விமர்சனம்

1 இல்ல 2 இல்ல!… 3 கெட்டப்பில் களமிறங்கும் அசோக் செல்வன்…. நித்தம் ஒரு வானம் விமர்சனம்…..!!!!

வாழ்கையில் நடைபெறும் இருவேறு சம்பவங்களுடன் தன்னை பொறுத்திக்கொண்டு அவர்களை தேடி பயணிக்கும் நபர் குறித்த கதைக்களம் தான் நித்தம் ஒரு வானம். சென்னையில் தன் தாய் தந்தையுடன் வாழ்ந்துவரும் அசோக்செல்வன் (பிரபா), சிறுவயதிலிருந்தே தான் உண்டு, தன் வேலை உண்டு என்று யாருடனும் நெருங்கிபழகாமல் 100 % பர்ஃபெக்ட்டான நபராக இருக்கிறார். இவர் படிக்கும் கதைப்புத்தகத்தில் வரக்கூடிய கதாப்பாத்திரங்களை தான் என்று நினைத்துக் கொள்வார். இதற்கிடையே தனக்கு நிச்சயிக்கும் பெண்ணை அதிகளவு விரும்பும் அசோக்செல்வன் அவளுக்காக நேரத்தை அதிகம் செலவு செய்கிறார்.

இதையடுத்து திருமணத்துக்கு முந்தையநாள், தான் காதலித்த நபர் குறித்து அசோக்செல்வனிடம், அப்பெண் கூற அவரும் அதுப்பற்றி தெரிந்துக்கொள்ள விருப்பப்படாமல் கடந்துசெல்கிறார். அதன்பின் வாழ்க்கை பற்றி அட்வைஸ் செய்ய திருமணத்திற்கு முந்தையநாள் தான் விரும்பிய காதலனுடன் அசோக்செல்வனுக்கு நிச்சயித்த பெண் சென்று விடுகிறார். அவ்வாறு தன் திருமணம் தடைப்பட்டுவிட்ட மனஅழுத்தத்தில் பாதிக்கப்படும் அசோக்செல்வன் அதில் இருந்து மீண்டுவர மிகவும் சிரமப்படுகிறார். பின் அவருடைய குடும்ப மருத்துவரிடம்(அபிராமி) சென்று இது தொடர்பாக கூற, அவரும் இதிலிருந்து மீண்டுவர தான் எழுதிய 2 சிறுகதை புத்தகத்தை கொடுத்து படிக்க சொல்கிறார். அவரும் அதை படிக்க அந்த சிறுகதையில் நடக்கும் இருவேறு சம்பவங்களில் வரும் கதாநாயகனாக தன்னை கற்பனை செய்துக்கொள்கிறார் அசோக்செல்வன்.

அந்த இரு காதல்கதையின் இறுதியில் நடந்தது என்னவென்று தெரிவதற்குள் அப்புத்தகத்தில் இருக்கும் கடைசி பக்கங்கள் இல்லாமல் குழப்பத்தில் மாட்டிக் கொள்கிறார். இதற்கென அந்த மருத்துவரிடம் முறையிட அவரும் அந்த சம்பவங்கள் உண்மை எனவும் அவர்களை தேடிச்சென்றால் உனக்கான விடை கிடைக்கும் எனவும் கூறுகிறார். இதன் காரணமாக அசோக்செல்வன் அந்த உண்மை கதாப்பாத்திரங்களை தேடி போகிறார். அந்த கதைகளில் முடிவில் என்ன நடந்தது..? அசோக்செல்வன் நினைப்பதுபோல் பாசிடிவ்வாக நடந்ததா..? (அ) நெகடிவ்வாக நடந்ததா..? இறுதியில் வாழ்கையை அவர் எப்படி புரிந்துக்கொள்கிறார்? என்பதே படத்தின் மீதிக்கதை ஆகும்.

தான் நடிக்கக்கூடிய திரைப்படங்களில் வித்யாசனமான கதாப்பாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்துவரும் அசோக்செல்வனின் நடிப்புக்கு இப்படம் சிறப்பு வாய்ந்ததாக அமைந்திருக்கிறது. 3 விதமான கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள அசோக்செல்வன் தனக்கான நடிப்பை இயல்பாக வெளிப்படுத்தி அனைவரையும் கவர்ந்துள்ளார். அத்துடன் கொங்குதமிழ் பேசும் கதாப்பாத்திரத்தில் கைத்தட்டல் பெறுகிறார். கதாநாயகிகளாக வரும் ரிதுவர்மா, அபர்ணா பாலமுரளி, ஷிவாத்மிகா 3 பேரும் அவர்களுடைய பணியை சிறப்பாக செய்து முடித்திருக்கின்றனர். அதிலும் குறிப்பாக அபர்ணா பால முரளியின் கதாப்பாத்திரமும் அவரின் இயல்பான நடிப்பும் திரைப்படத்திற்கு கூடுதல் பலமாக அமைந்திருக்கிறது.

இரு வேறு கதையை எடுத்துக்கொண்டு அதனுடன் பயணிக்கும் கதாநாயகன் எனும் மையக் கருவை கொண்டு படத்தை இயக்கியுள்ளார் டிரைக்டர் ரா.கார்த்திக். கதையின் நீரோட்டம் ரசிக்குமாறு இருந்தாலும் திரைக் கதை சுவாரசியத்தை கொடுக்கவில்லை. திரைக் கதையில் டிரைக்டர் இன்னும் கவனம் செலுத்தி இருக்கலாம். கதையில் இடம்பெறும் காட்சிகள் வெறும் சம்பவங்களாக கடந்து சென்று விடுகிறது. தான் படித்த கதையை பற்றி தெரிந்துக்கொள்ள கதாநாயகன் காட்டும் காரணம் ஏற்றுக்கொள்ளும்படி இல்லை.

அபர்ணா பால முரளியின் கதாப்பாத்திரத்தை சிறப்பாக வடிவமைத்து ரசிக்க வைத்திருக்கிறார். இருந்தும் அந்த கதாப்பாத்திரத்தின் நேரத்தை குறைத்து இருக்கலாம். இதனிடையில் படத்தில் பயணிக்கும் இடங்களானது ரசிக்குமாறும், வித்யாச அனுபவத்தையும் கொடுக்கிறது. படத்தில் இடம்பெறக்கூடிய ஒருசில பாடல்கள் படத்தின் நீரோட்டத்தில் செல்ல வைத்து ரசிக்கவைத்துள்ளார் இசையமைப்பாளர் கோபிசுந்தர். அத்துடன் விது அய்யனாவின் ஒளிப்பதிவு அந்த இடங்களுக்கு பார்வையாளர்களை செல்ல வைத்துள்ளது.

Categories

Tech |