உத்தர பிரதேச மாநிலம் கான்பூர் பகுதியை சேர்ந்தவர் ஆகாஷ். இவருக்கும் அந்த பகுதியில் வசிக்கும் ஒரு இளம்பெண்ணுக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் ஆனது. திருமணம் முடிந்த பின்பும் வேலைக்கு செல்லாமல் இருந்துள்ளார் ஆகாஷ். இதனால் கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. ஒருமுறை இப்படி ஒரு தகராறில் மனைவியை ஆகாஷ் வெளியே அனுப்பியுள்ளார். இதனால் கோபமடைந்த மனைவி மற்றும் அவரது குடும்பத்தினர் ஆகாஷ் குடும்பம் மீது புகார் தெரிவித்தனர். தன் மீதும் தங்கள் குடும்பம் மீதும் கொடுக்கப்பட்ட புகாரை வாபஸ் வாங்கும்படி மனைவியை மிரட்டியுள்ளார் ஆகாஷ்.
ஆனால் அதற்கு விடாப்பிடியாக அந்த பெண் மறுப்பு தெரிவித்து வந்துள்ளார். இதனால் மிகவும் கோபமடைந்த ஆகாஷ் தனது நண்பர்களுக்கு தனது மனைவியின் வாட்சப் எண்ணை அனுப்பி ஆபாசமாக பேசுமாறு கொடுத்துள்ளார். அவர்களும் தங்களுக்கு தெரிந்தவர்களுக்கு என அவரது எண்ணை பரிமாறி ஆபாசமாக பேசியும் புகைப்படம் அனுப்பியும் ஆகாஷ் மனைவிக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளனர். இதனால் அவர் காவல்நிலையத்தில் மீண்டும் புகார் கொடுத்துள்ளார். இதுதொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் கணவனே மனைவியின் எண்ணை நண்பர்களுக்கு பகிர்ந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.