ஆந்திர மாநிலத்தில் மேற்கு கோதாவரி மாவட்டத்திலுள்ள நரசாபுரம் என்ற பகுதியை சேர்ந்த குந்தவி -கோவிந்த் ஆகியோருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் விரைவில் திருமணமாக உள்ள தனது பேத்தி மற்றும் அவரின் வருங்கால கணவருக்காக சங்கராந்தியை முன்னிட்டு தாத்தா -பாட்டி இருவரும் சேர்ந்து தடபுடலாக விருந்து ஏற்பாடு செய்தனர்.
அந்த விருந்தில் 100 வகையான இனிப்புகள், 75 கார வகைகள், 15 ஐஸ்கிரீம் வகைகள் மற்றும் கேக்குகள் என மொத்தம் 365 வகையான உணவுகளை ஏற்பாடு செய்து பரிமாறினார். இதனைக் கண்டு திருமண வாழ்க்கையை தொடங்க உள்ள புதுமண தம்பதியினர் திக்கு முக்காடினார். இந்த சம்பவம் காண்போரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.