காட்டு யானைகள் அட்டகாசம் செய்ததால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வால்பாறை பகுதியில் இருக்கும் எஸ்டேட் பகுதிகளில் காட்டு யானைகள் முகாமிட்டுள்ளது. நேற்று முன்தினம் நள்ளிரவு நேரத்தில் கருமலை எஸ்டேட் அரசு உதவி பெறும் நடுநிலை பள்ளி வளாகத்திற்குள் காட்டு யானைகள் நுழைந்தது. அங்குள்ள பொருட்களை அடித்து உடைத்த பிறகு காட்டு யானைகள் அப்பகுதியில் இருக்கும் மகளிர் சுய உதவி குழு ரேஷன் கடையின் மேற்கூரையை உடைத்து அட்டகாசம் செய்து ரேஷன் அரிசிகளை தூக்கி வீசியது. இதுகுறித்து அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காட்டு யானைகளை வனப்பகுதிகள் விரட்டி அடித்தனர். 50-க்கும் மேற்பட்ட முறை அந்த ரேஷன் கடையை காட்டு யானைகள் உடைத்து சேதப்படுத்தியது குறிப்பிடத்தக்கதாகும்.