சவுதி அரேபியாவை சேர்ந்தவர் அபு அப்துல்லா. இவருடைய வயது 63. இவர் தனக்கு நடந்த 53 திருமணங்கள் குறித்து பேசி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் தான் முதன்முறையாக திருமணம் செய்து கொண்ட போது ஒன்றுக்கு மேல் திருமணம் செய்யக்கூடாது என்று எண்ணியிருந்ததாக கூறிய அவர், தன்னுடைய 20 வயதில் தன்னைவிட ஆறு வயது மூத்த பெண்ணை திருமணம் செய்து கொண்டுள்ளார். இதனால் சிறிது காலத்திலேயே இருவருக்கும் இடையே மனகசப்பு ஏற்பட்டதன் காரணமாக வேறு திருமணம் செய்து கொண்டுள்ளார்.
இதனால் முதல் மனைவியை பிரிந்துவிட்டு இரண்டாவதாக திருமணம் செய்துள்ளார். பின்னர் இரண்டாவது மனைவிக்கும் முதல் மனைவிக்கும் இடையே பிரச்சனை வெடித்ததால் மூன்றாவது திருமணம் செய்துள்ளார். இப்படியே மூன்று, நான்கு என்று மொத்தம் 53 வரை திருமணம் செய்து கொண்டதாக கூறியுள்ளார். இவர் மனரீதியான தன்னுடைய நிம்மதிக்காகவே இவை அனைத்தும் நடந்ததாகவும் கூறியுள்ளார்.
அத்தோடு ஒருநாள் வேலை விஷயமாக வெளிநாட்டுக்கு சென்றுள்ளார். அங்கேயே ஒரு வெளிநாட்டு பெண்ணை பார்த்து பிடித்துப் போக அவரை கல்யாணம் செய்து கொண்டுள்ளார். மேலும் தான் இனிமேல் யாரையும் கல்யாணம் செய்து கொள்ள மாட்டேன் என்று இவர் முடிவெடுத்து விட்டதாகவும் தெரிவி த்துள்ளார்.இந்த வீடியோ இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
فيديو متداول لرجل مُعدد:
تزوجت 53 مرة والجبان والخواف لا يسمع كلامي! pic.twitter.com/H4gItanxsX
— Gorgeous (@gorgeous4ew) September 2, 2022