மருத்துவம் பயில ஒரே பள்ளியில் உள்ள 7 மாணவிகளுக்கு இடம் கிடைத்துள்ளது.மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலத்தில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பயின்ற பிளஸ்-12 மாணவிகள் நீட் தேர்வில் தேர்ச்சி அடைந்தனர். அதில் அரசின் 7.5 ஒதுக்கீட்டின் கீழ் மருத்துவ படிப்பிற்காக 7 மாணவிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களில் கனிகா புதுக்கோட்டையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரியிலும், தீபிகா மதுரை அரசு மருத்துவக் கல்லூரியிலும், வாலண்டினா தேனி அரசு மருத்துவக் கல்லூரியிலும் ,சுவாதி சிவகங்கை அரசு கல்லூரியிலும், யமுனா திண்டுக்கல் அரசு கல்லூரியிலும் நிஷாலினி திருச்சி தனியார் கல்லூரியிலும் ,எம்.பி.பி.எஸ் தேர்வாகி உள்ளார்கள்.மாற்றம் நிஷா திருநெல்வேலி அரசு பல் மருத்துவதுக்கு தேர்வாகியுள்ளார்.
கீரமங்கலத்தில் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் அதிக அளவில் நீட் தேர்வில் வெற்றி பெற்று உள்ளனர்.புதுக்கோட்டை மாவட்டத்தில் மட்டும் 23 பேருக்கு மருத்துவம் படிக்க இடம் கிடைத்துள்ளது. அதில் 20 பேர் எம்பிபிஎஸ் க்கும் மூன்று பேர் பல் மருத்துவத்திற்கும் தேர்வாகியுள்ளனர்.