Categories
தேசிய செய்திகள்

OMG! 1 இல்ல 2 இல்ல…. 8 வருஷமா கணவன் சாப்பாட்டில் மருந்து…. வெளியான பகீர் சம்பவம்…!!!!

கணவர் செய்த வன்கொடுமையால் 8 வருடமாக சாப்பாட்டில் மருந்து கலக்கி கொடுத்த மனைவி கைது செய்யப்பட்டுள்ளார்.

கேரள மாநிலத்தில் உள்ள திருவனந்தபுரம் பகுதியை சேர்ந்தவர் சதீஸ் சங்கர்(38).  இவரது மனைவி பெயர் ஆஷா (34). இவர் 2012ஆம் ஆண்டு முதல் கோட்டயம் மாவட்டத்தில் உள்ள பாலா நகரில் புதிதாக வீடு வாங்கி வசித்து வருகிறார்கள். ஒரு தனியார் கம்பெனியில் ஊழியராக இவரது கணவர் வேலை பார்த்து வருகிறார். 2013 ஆம் ஆண்டு முதல் இவரது கணவர் தம்  மனைவியை  உடலளவிலும் மனதளவிலும் வன்முறை கொடுமைப்படுத்தினார்.

இதனால் பொறுமை இழந்த மனைவி ,அவரை ஏதாவது ஒரு விதத்தில் அடக்க வேண்டும் என திட்டமிட்டு மனநிலை பாதித்தவர்கள் சாப்பிடக்கூடிய மருந்தை அவரது சாப்பாட்டில் கலந்து கொடுத்தார். இதனையடுத்து அன்று முதல் அவரது கணவரின் உடல்நிலையில் பெரும் பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். கடந்த ஏழெட்டு ஆண்டுகளாக மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் இந்த நோய் குறைந்தபாடில்லை .இதனை அடுத்து 2019 செப்டம்பர் மாதத்தில் வீட்டில் சாப்பிடாமல் ஹோட்டலில் சாப்பிடலாம் என முடிவெடுத்து ,மூன்று வேளையும் ஹோட்டலில் சாப்பிட்டு வந்தார்.

அப்போது சதீஷின் உடல்நிலையில் இந்த 20 நாள் எந்தவிதமான பாதிப்பும் ஏற்படவில்லை என்பதை உணர்ந்த அவர் வீட்டு சாப்பாட்டில் தான் ஏதோ தவறு நடந்துள்ளது   என்பதை உணர்ந்துகொண்டார். இதனையடுத்து இவர் மனைவியின் தோழி ஒருவரை கடந்த வாரம் சந்தித்து இந்த நிலைமையை எடுத்துக் கூறினார். அப்போது இந்த தோழி அவரின்  மனைவி சாப்பாட்டில் கலக்கி கொடுக்கும் மருந்தைப் பற்றி தெளிவாக கூறியுள்ளார்.

மேலும் இந்த மருந்தை எனது கணவருக்கும் கொடுக்குமாறு அறிவுறுத்தினார். ஆனால் நான் அதை கண்டுகொள்ளவில்லை என்று கூறியுள்ளார். உடனடியாக சதீஷ் தன் மனைவிமீது பாலா நகர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார் .இதன்பின் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் அவர் மனைவியிடம் விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் கடந்த 8 வருடமாக இந்த செயலில் ஈடுபட்டுள்ளதாக உண்மையை ஒப்புக்கொண்டார்.

இப்படி தினசரி இந்த மருந்து கொடுப்பதால் கணவரின் உள்ளுறுப்புகள் பாதிக்கப்பட்டு விரைவில் இறந்து விடுவார் என கூறிய மனைவி அப்படி மருந்தை கொடுக்க காரணம் அவர் எனக்கு தினசரி செய்த கொடுமையே என போலீசில் தெரிவித்தார். இதனையடுத்து அவரது வீட்டை போலீசார் பரிசோதித்தபோது ஒரு அறையில் பெட்டி பெட்டியாக மனநிலை பாதித்தவர்களுக்கு  கொடுக்கப்படும் மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து சதீஷின் மனைவி ஆஷாவை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Categories

Tech |