ஒடிசா மாநிலத்தில் ஒரு தனியார் மருத்துவமனையில் ஒரு உடம்பு, இரண்டு தலை, மூன்று கையுடன் ஒரு குழந்தை பிறந்துள்ளது. இதை கண்டு பலரும் ஆச்சரியம் அடைந்தனர்.
தற்போது விசித்திரமாக குழந்தைகள் பிறப்பது என்பது அதிகமாக நடந்து கொண்டுதான் வருகின்றது. ஒரே பிரசவத்தில் இரண்டு குழந்தைகள், மூன்று குழந்தைகள் பிறந்துள்ளது என்பதை கேள்வி பட்டிருப்போம். ஆனால் இங்கு ஒரு உடம்புடன், இரண்டு தலை, மூன்று கையுடன் ஒரு குழந்தை பிறந்துள்ளது. இது மிக ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஒடிசாவின் கேந்திர பாரா மாவட்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் இந்த அதிசய சம்பவம் நடந்துள்ளது. அப்பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணிற்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அங்குள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு ஒரு உடம்பு, இரண்டு தலைகள் மற்றும் மூன்று கைகளுடன் இரண்டு பெண் குழந்தைகள் ஒட்டிப் பிறந்து உள்ளது. இவர்கள் இரண்டு மூக்குகளால் சுவாசிக்கின்றனர் என்றும், இவர்கள் ஒட்டிப்பிறந்த இரட்டைகுழந்தைகள் எனவும் மருத்துவர்கள் கூறுகின்றனர். மேலும் இவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.