Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

1 எலுமிச்சை பழம் 25 ஆயிரம் ரூபாய்…. ஏலம் எடுத்த விவசாயி…. அம்மனுக்கு சிறப்பு பூஜை…!!!

பூஜையில் வைத்திருந்த எலுமிச்சை பழத்தை விவசாயி 25 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் எடுத்துள்ளார்.

ஈரோடு மாவட்டத்தில் உள்ள பழனி கவுண்டம்பாளையத்தில் மகாமாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் தை மாதம் குண்டம் விழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு குண்டம் விழாவுக்காக கடந்த 18-ஆம் தேதி கம்பம் நடப்பட்டு அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றுள்ளது. கடந்த 26-ஆம் தேதி நடைபெற்ற குண்டம் விழாவில் பக்தர்கள் புனித நீராடிவிட்டு குண்டம் இறங்கி தங்களுடைய வேண்டுதலை நிறைவேற்றியுள்ளனர்.

அதன்பிறகு அம்மனுக்கு பூஜை நடைபெற்று உள்ளது. அந்த பூஜையில் மாரியம்மன் மடியில் வைத்திருந்த ஒரு எலுமிச்சை பழத்தை ஏலம் விட்டுள்ளனர். இந்த எலுமிச்சை பழத்தை அதே பகுதியில் வசிக்கும் விவசாயியான செல்வராஜ் என்பவர் 25 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் எடுத்துள்ளார்.

Categories

Tech |